நாகப்பட்டிணம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், மணல்மேடு அருகே உள்ள தெற்கு கார்குடி மெயின் ரோட்டை சேர்த்த 75 வயதான அரும்பு என்ற மூதாட்டி, தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவரது கணவர் கோவிந்த ராஜ் பத்து வருடங்களுக்கு முன்பு காலமாகி விட்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
யாரும் ஆதரவற்ற நிலையில் அரசு முதியோர் உதவி தொகையை கொண்டு அரும்பு தன் வாழ்நாளை கடத்தி வந்தார்.
இந்நிலையில், ஜனவரி 26 குடியரசு தினத்தன்று காலை வெகு நேரமாகியும் அரும்பு வெளியில் நடமாட்டமில்லாததால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அரும்பு கொடூரமாக கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மணல்மேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை காவல்துறை துணை கண்காணிப்பாளர் பி.களியதீர்த்தம் தலைமையிலான மணல்மேடு காவல் துறையினர், அரும்புவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பந்தமாக மணல்மேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், கடலங்குடியை சேர்ந்த பாலாஜி (வயது 18) என்ற இளைஞர், நங்கநல்லூரை சேர்ந்த பிரபு என்பவருடன் சேர்ந்து, அரும்பு கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க சங்கிலிக்காக அவரை கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்து இருப்பது காவல்துறையினரின் விசாரணையில் தற்போது தெரியவந்துள்ளது.
கேவலம், ஒரு தங்க சங்கிலிக்காக 75 வயது மூதாட்டியை கொடூரமாக கொலை செய்த அந்த இரக்கமற்ற அரக்கர்கள் இருவரையும், மணல்மேடு காவல் துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தின் உத்தவின் பேரில் சிறையில் அடைத்துள்ளனர்.
–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com