திருச்சி ஜங்ஷன் அருகே உள்ள பாரதிதாசன் சாலையில், புதிதாக போடப்பட்ட வேகத்தடையில் வர்ணம் (பெயிண்ட்) அடிக்காததால், இரவு நேரங்களில் வாகனங்களில் வரும் நபர்கள் நிலைத்தடுமாறி கீழே விழும் நிலை நேரிட்டது.
இவற்றை உன்னிப்பாக கவனித்த எஸ்.மதியழகன், பி.யூஜின் ஜெகநாதன், எஸ்.ஐயப்ப தாஸ் என்ற இளநிலை பொறியியல் பட்டதாரி மாணவர்கள், தங்கள் சொந்த செலவில் புதிதாக போடப்பட்ட இந்த வேகத்தடைக்கு. நள்ளிரவில் வர்ணம் (பெயிண்ட்) அடித்தனர். அதன் பிறகே வாகனங்கள் அனைத்தும் இயல்பாக செல்ல முடிந்தது.
அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை, இந்த மாணவர்கள் தங்கள் சொந்த செலவில் செய்திருப்பது உண்மையிலுமே பாராட்டத்தக்கது.
இதைப் பார்க்கும் போது “சித்திரை மலர்களாகவும் சிரிப்போம்; கத்தி முனைகளாகவும் இருப்போம்” என்ற கவிதை வரி தான் நம் நினைவுக்கு வருகிறது.
-ரா.ரிச்சி ரோஸ்வா.
மிக அருமை…
2020 ல் உலகம் வல்லரசு ஆவது, இவர்களை போன்ற இளைஞர்கள் கையில் தான் உள்ளது
Super
வாழ்த்துக்கள் தோழர்களே சேவை தொடர…..
Super bro
Varukalam Illaigargal Kaiyil yenbadurkku APJ sonnavarthai sathiyamakiradu.valga
nallvargal.
MakkalnalamVenkataraman.