சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பகுதியில், மலைப்பாதையின் 18 – ஆவது கொண்டை ஊசி வளைவு அருகில் இன்று காலை துர்நாற்றம் வீசியது. அங்கு சென்று சிலர் பார்த்தபோது, காட்டெருமை ஒன்று இறந்து கிடந்தது.
அங்கு சென்ற வனத்துறை மற்றும் கால்நடைத்துறையினர், இறந்த காட்டெருமையை உடலை ஆய்வு செய்து, பிரதே பரிசோதனை செய்து, பின்னர் அப்பகுதியிலேயே எரித்தனர்.
இது குறித்து ஏற்காடு வனச்சரகர் முனுசாமி கூறியதாவது:
“ஏற்காடு மலைப்பாதையை ஒட்டிய பகுதியில் சுற்றி திரிந்த காட்டெருமை இது. இதற்கு ஒரு கால் ஊனமாக இருந்தது. இந்நிலையில் தண்ணீர் குடிக்கச் சென்ற காட்டெருமை, பாறையில் இருந்து வழுக்கி விழுந்து இறந்துள்ளது “ இவ்வாறு அவர் கூறினார்.
-நவீன் குமார்.