தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 1981 முதல் 2011 வரை, 47 நாட்கள், நெற்றிக்கண், பெங்கியல்லி அரலிட ஹூவு, எனக்குள் ஒருவன், நான் மகான் அல்ல, ஸ்ரீராகவேந்திரா, வேலைக்காரன், சிவா, உன்னைச்சொல்லி குற்றமில்லை, ரோஜா, அண்ணாமலை, முத்து, நாம் இருவர் நமக்கு இருவர், பூவேலி, ரோஜா வனம், சாமி, திருமலை, ஐயா, இதய திருடன், குசேலன், திருவண்ணாமலை, நூற்றுக்கு நூறு, கிருஷ்ணலீலை….ஆகிய திரைப்படங்களை தயாரித்த “கவிதாலயா புரொடக்ஷன்ஸ் (Kavithalaya Productions)”, பிரபல திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான மறைந்த கே.பாலச்சந்தரால் 1981- ல் தொடங்கப்பட்ட நிறுவனமானகும்.
இயக்குனர் கே.பாலச்சந்தர் மறைவிற்கு பிறகு, கவிதாலயா புரொடக்ஷன்ஸ் கடன் தொல்லை காரணமாக மிகப்பெரிய நெருக்கடியில் இருப்பதாகவும், இதனால் மறைந்த கே.பாலச்சந்தர் வீடு மற்றும் அவரது சொத்துக்களை வங்கி ஜப்தி செய்து ஏலத்தில் விட்டதாகவும், ஒரு சில ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு, கவிதாலயா நிறுவனம் தற்போது விரிவான விளக்கம் அளித்துள்ளது.
அதை நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.
இயக்குனரும், தயாரிப்பாளருமான மறைந்த கே. பாலச்சந்தர், திரைப்படத்துறையை தொழிலாகவோ அல்லது கலையாகவோ மட்டுமே அவர் அதை கருதவில்லை, அவர் உயிர் இருக்கும்வரை அதை ஒரு தவமாகவே கருதினார். அதனால்தான் அவர் மறைவிற்கு பிறகும் அவரது படைப்புக்களின் மூலம் உயிர் வாழ்கிறார்.
அப்படிப்பட்ட அந்த மாபெரும் படைப்பாளியின் “கவிதாலயா” நிறுவனம், மீண்டும் புத்துயிர் பெற, நமது வாசகர்களின் சார்பாக நாமும் வாழ்த்துவோம்.
–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com