திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி வட்டம், எருக்காட்டூர் கிராமத்தில் ONGC குழாயிலிருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் அருகே உள்ள எருகாட்டூர் கிராமத்தில் ONGC நிறுவனமானது சுமார் ஆறு இடங்களில் தொடர்ந்து எண்ணெய் எடுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று (15.02.2018) காலை அந்த பகுதியில் ஆற்றினை கடந்து செல்லகூடிய எண்ணெய் குழாயானது உடைப்பு ஏற்பட்டு எண்ணெய் வெளியேறி ஆற்றில் உள்ள தண்ணீரில் கலந்துள்ளது.
இந்த நிகழ்வானது அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ONGC நிறுவனம் தொடர்ந்து ஆழ்குழாய் பதித்து எண்ணெய் எடுத்து வருவதனால் அப்பகுதியில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று குழாய் உடைந்து குழாயில் எண்ணெய் கசிவி ஏற்பட்டதினால் அப்பகுதியில் உள்ள ஆற்று நீரில் எண்ணெய்க்கலந்துள்ளது. இதனால் விவசாய நிலங்களுக்கு செல்லகூடிய ஆற்றுநீர் பாதிக்கப்பட்டு விலை நிலம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்
ONGC நிறுவத்தின் செயல்பாடுகளினால் இந்த பகுதியில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அந்த நிறுவனத்தினை முற்றிலுமாக அந்த பகு தியிலிருந்து அகற்றிடவேண்டும் என்பதே எருக்காட்டூரில் வாழக்கூடிய பொது மக்கள் மற்றும் விவசாயிகளின் நீண்ட நாளைய கோரிக்கையாக உள்ளது.
-ஜி.ரவிச்சந்திரன்.