வனத்து அந்தோணியார் கோவிலில் சிலைகள் உடைக்கப்பட்டும், அந்தேணியார் சிலையும் திருடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், ஏற்காட்டிற்கு கொண்டப்பநாய்க்கன்பட்டி வழியாக செல்லும் மலைப்பாதையின் 10 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே, வனத்து அந்தோணியார் ஆலயம் உள்ளது. இங்கு குழந்தை இயேசு, வேளாங்கண்ணி மாதா, அந்தோணியார், சூசையப்பர் உள்ளிட்ட சுரூபங்கள் உள்ளன. ஏற்காடு மற்றும் ஏற்காடு அடிவாரத்தை சேர்ந்த மக்கள் இந்த ஆலயத்திற்கு வந்து வணங்கி செல்வது வழக்கம்.
மேலும் ஆண்டுதோறும் ஜூன் 13-ஆம் தேதி இங்கு திருவிழா நடத்தப்படும். இந்த கோவிலில் 18.02.2018 ஞாயிற்றுக்கிழமை மர்ம நபர்கள் வேளாங்கண்ணி மாதா மற்றும் குழந்தை இயேசு சிலையை உடைத்தும், அந்தோணியார் சிலையை திருடியும் சென்றுள்ளனர்.
இது குறித்து காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?
-நவீன் குமார்.