சேலம் மாவட்டம், ஏற்காட்டில் இன்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி தனியார் தங்கும் விடுதியில் நடைப்பெற்றது. ஏற்காடு காவல் துறை மூலம் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் ஏற்காட்டை சேர்ந்த ஆட்டோ, டாக்ஸி, வேன், ஓட்டுநர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.
ஏற்காடு காவல் ஆய்வாளர் ஆனந்தன் தலைமையில் நிகழ்ச்சி துவங்கியது. இந்நிகழ்ச்சியில் சேலம் ஊரக உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் சங்கர நாரயணன் மற்றும் சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கதிரவன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கதிரவன் பேசியதாவது:
“சாலை விதிகளை முறைபடி முற்றிலும் தெரிந்து வாகணங்களை ஓட்ட வேண்டும். செல்போன் பேசியபடியும், மது அருந்தியும் கட்டாயம் வாகனம் ஓட்டக்கூடாது. பயணியர் வாகனங்கள் ஓட்டுபவர்கள் சீருடை அணிந்திருக்க வேண்டும், இருசக்கர வாகனம் ஓட்டும்போது தலைகவசம் அணிந்திருக்க வேண்டும். சாலைகளில் வைக்கப்பட்டிருக்கும் போக்குவரத்து அறிவிப்புகளை கண்டு அதற்கேற்றார் போல் வாகனம் ஓட்டினாலே, அதிகளவிலான விபத்துகளை தடுக்கலாம். ” இவ்வாறு பேசினார்.
மேலும், அங்கு வந்திருந்த ஓட்டுனர்களிடம் கருத்துகளை கேட்டறிந்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை ஏற்காடு காவல் உதவி ஆய்வாளர் மைக்கல் ஆண்டனி செய்திருந்தார்.
–நவீன்குமார்.