காரைக்கால் துறைமுகத்தில் இருந்து நெய்வேலி, திருச்சி போன்ற பகுதிகளுக்கு 14 டயர் கொண்ட கனரக வாகனங்கள் மூலம் நாள்தோறும் டன் கணக்கில் நிலக்கரி கொண்டு செல்லப்படுகிறது.
லாரியில் ஏற்றிச் செல்லும் நிலக்கரி பறக்காமல் இருக்கவும், கீழே சரிந்து விடாமல் இருக்கவும், போதுமான பாதுகாப்புடன் எடுத்துச் செல்ல பல்வேறு ஏற்பாடுகள் செய்துள்ளனர். இருப்பினும், திருவாரூர் வழியே கொண்டு செல்லும் போது, பல்வேறு இடங்களில் வேகத்தடைகளில் லாரிகள் ஏறி, இறங்கும் போது ஒரு பக்கத்தில் இருந்து சரிந்து நிலக்கரிகள் சாலையில் கொட்டிவிடுகிறது.
இதைக் கண்டுகொள்ளாமல் லாரிகள் சென்று விடுவதால், சாலையில் நிலக்கரிகள் குவியல், குவியலாகக் கிடக்கிறது. பின்னால் வரும் வாகனங்கள் அதன்மீது ஏறி இறங்கும் போது உராய்வு காரணமாக தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது.
ஆகையால், சாலையில் சிதறிக்கிடக்கும் நிலக்கரிகளை உடனடியாக அப்புறப்படுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-க.குமரன்.