திருவாரூர் மாவட்டம், குடவாசல், சுண்ணாம்பு பாளையம், சேட்டு மேட்டுத் தெருவில் அமைந்துள்ள தர்மராஜா என்னும் ஸ்ரீ கிருஷ்ணார்சுன சமேத ஸ்ரீ திரௌபதையம்மாள் கோவிலில் அம்மன் வீதியுலா, இருபத்தெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமரிசையாக இன்று நடைப்பெற்றது.
கடந்த 19-ம் தேதி காலை 9 மணிக்கு கொடி ஏற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அன்று இரவு 7 மணிக்கு தர்மராஜா பிறப்பு நிகழ்ச்சியும், 20-ம் தேதி கிருஷ்ணர் பிறப்பு நிகழ்ச்சியும், 21-ம் தேதி அம்மன் பிறப்பு நிகழ்ச்சியும், 22-ம் தேதி திருக்கல்யாணமும், 23-ம் தேதி வஸ்திராபரணமும், 24-ம் தேதி அரவான் கடபலியும், 25-ம் தேதி தபசும், 26-ம் தேதி காலை 9 மணிக்கு துரியோதணன் யுத்தமும், திரௌதியம்மாள் கூந்தல் முடித்தலும், அன்று மாலை 7 மணிக்கு தீமிதி எனும் அக்னி வசந்தம் நிகழ்ச்சியும், இன்று (27 ம் தேதி) மாலை 6 மணிக்கு அம்மன் வீதியுலாவும், 28-ம் தேதி தர்மராஜாவுக்கு பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறும்.
இருபத்தெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த விழா என்பதால், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.
-க.குமரன்.