மரணிக்கும் வரை அவன் கழுத்தில் தூக்கிலிட வேண்டும்!- சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில், நீதிபதி வேல்முருகன் வழங்கிய தீர்ப்பின் உண்மை நகல்.

கொலைக் குற்றவாளி தஷ்வந்த்.

சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த சிறுமி ஹாசினி, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், தகவல் தொழில்நுட்ப பொறியாளர் தஷ்வந்த் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்தது. இந்த வழக்கில் இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில், தஷ்வந்த் என்ற அந்த மனித மிருகத்திற்கு “மரணத்தண்டனை” வழங்கி நீதிபதி வேல்முருகன் 19.02.2017 அன்று தீர்ப்பளித்தார்.  இத்தீர்ப்பு தஷ்வந்த் போன்ற மனித மிருகங்களுக்கு மறக்க முடியாத பாடமாக அமையும்.

இத்தீர்ப்பின் மூலம் நீதிபதி வேல்முருகனின் சமூக அக்கறையும், அவர் நீதித்துறை மீது வைத்திருக்கும் உண்மையான பற்றும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

நீதித்துறை மீது அவ்வப்போது எத்தனையோ விமர்சனங்கள் எழுந்தாலும், இது போன்ற தீர்ப்புக்கள் மக்களுக்கு நீதித்துறை மீதான நம்பிக்கையை மீண்டும் துளிர்க்கச் செய்திருக்கிறது.

இதுவே இறுதியான தீர்ப்பு இல்லை; இந்த வழக்கில் நீதித்துறை நடைமுறைப்படி குற்றவாளிக்கு மேல் முறையீடு செய்யும் சட்ட ரீதியான உரிமை இருக்கிறது.

ஆனாலும், மேல் முறையீடுகளை விரைவாக விசாரித்து, இறுதியான தீர்ப்பை மிக விரைவில் உறுதிப்படுத்த வேண்டும்.

ஏனென்றால், தாமதிக்கப்பட்ட நீதி, புறக்கணிக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும்.

சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில், நீதிபதி வேல்முருகன் வழங்கிய தீர்ப்பின் உண்மை நகல். நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Loader Loading...
EAD Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

 

Leave a Reply