குடவாசல் ஸ்ரீ கோணேஸ்வர சுவாமி திருக்கோயிலில் மாசிமகப்பெருவிழா.

குடவாயில் ஸ்ரீ கோணேஸ்வர சுவாமி திருக்கோவிலில் மாசி மகப் பெருவிழா 20.2.2018 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் இரவில் சூரிய பிரபை, சேஷ வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம், புஷ்ப பல்லக்கு போன்ற வாகனங்களில் சிவன், பார்வதி, விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் இரவில் வீதியுலா நடைபெற்றது, 28.2.2018 அன்று திருத்தேர் விழா சிறப்பாக  நடைபெற்றது, பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச்சென்றனர்.

கோவில் சிறப்பு :

குடவாசல் கோணேஸ்வர கோவிலுக்கு மகாமகம்  சிறப்பு பெற்ற கும்பகோணத்திலிருந்து தேவர்களும், அசுரர்களும் அமுதம் கடைந்து  அதனை குடத்தில்  அடைத்து எடுத்து வரும் போது அந்த அமுத குடம் கும்பகோணம் மகாமக  குளத்தில் விழுந்ததால் அங்கு 12 ஆண்டுக்கு ஒரு முறை  மகாமக விழா  நடக்கிறது.  கும்பகோணத்தில் விழுந்த அமுத குடத்தின் ஒரு பகுதியான  குடத்தின் வாயில்  இக்கோவிலின் குளத்தில்  விழுந்ததால் அக்குளம் புனிதம் பெற்று  அமுத நீரானது. இக்கோவில் குளத்திற்கும் மகாமகத்திற்கு தொடர்பு உள்ளதாக புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பு பெற்ற இக்கோவிலில் ஆண்டு தோறும் மாசி மக திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மாசி மக திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது

இன்று காலையில் பஞ்சமூர்த்தி களுக்கு சிறப்பு அபிசேகம் நடைபெற்று, வீதியுலா நடைபெற்றது. மதியம் 12.45 மணி அளவில் திருக் கோயில் அமிர்த குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி சிறப்பாக நடை பெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.விழாக் குழுவினர் உபயதாரர்கள் நிகழ்ச்சிகளை சிறப்பாக செய்திருந்தனர். இக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கா.மகேஸ்வரன்

Leave a Reply