திரிபுரா மாநிலத்தில், பாரதிய ஜனதா கட்சி அரசு பொறுப்பேற்றதுமே லெனின் சிலையை அகற்றியது. அதுபோல் தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகளும் அகற்றப்படும் என்று பாஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின் முகநூலில் நேற்று பதிவாகி இருந்தது.
இதனைத் தொடர்ந்து தமிழக அரசியில் கட்சி தலைவர்கள் ஹெச்.ராஜாவின் கருத்திற்கு கடும் எதிப்பு தெரிவித்து வருவதோடு, ஹெச்.ராஜாவை கண்டித்து தமிழகம் முழுவதும் திராவிடக் கழகம் மற்றும் தி.மு.க. உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் ராஜாவின் உருவபொம்மை எரிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி, திருவெறும்பூரிலும் இன்று ஆர்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஹெச்.ராஜா மற்றும் பா.ஜ.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும், ஹெச்.ராஜாவின் உருவ பொம்மையை செருப்பால் அடித்தும், தீ வைத்து கொளுத்தியும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.
இதில், திருவெறும்பூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன், தெற்கு ஒன்றிய செயலாளர் நவல்பட்டு விஜி, வடக்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ்.எம்.கருணாநிதி, துவாக்குடி நகர செயலாளர் காயம்பு, காட்டூர் பகுதி கழக செயலாளர் நீலமேகம், கூத்தைப்பார் பேரூர் கழக செயலாளர் செல்வம், தி.க. நிர்வாகி சேகர், மதிமுக தேர்தல் பணிகுழு மாநில நிர்வாகி புலவர்.முருகேசன், ஒன்றிய செயலாளர் பால்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. நிர்வாகிகள் மயில்பெரியசாமி, அப்பு, முத்துகுமார், அப்தூல்குத்தூஸ், தனசேகர், ஞனதீபம், சாந்தகுமாரி, செல்வமணி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதேபோல் பெல் (BHEL) ஏஐடியுசி மற்றும் டிடிஎஸ் தொழிற்சங்கம் சார்பில் பொதுச்செயலாளர் பாலமுருகன் தலைமையில், பெல் பயிற்சி மையத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, பாய்லர் காவல் நிலையம் சென்று ஹெச்.ராஜாவை கைது செய்ய கோரி புகார் மனுகொடுத்தனர்.
இந்நிலையில், தனது முகநூலில் ஹெச்.ராஜா இன்று பகிரங்கமாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
–ஆர்.சிராசுதீன்.
Yagavarayinum nakakka kavakkal sogappar soll ilukupattu. Manithan vai nallavishayangalai pesa ulladu adaivitu vandadaipesinal vambu than. marappom mannippom.