திருவண்ணாமலை மாவட்டம், திருவள்ளுவர் பல்கலைகழகத்தில் முதலிடம் பிடித்த ஆரணி, குன்னத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ பாரதி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஐம்பெரும் விழா மார்ச் 7-ந்தேதி துவங்கியது. இரண்டாவது நாளான நேற்று பிற்பகல் 02.00 மணி அளவில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது.
இதில் ஸ்ரீ பாரதி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயக்குநர் அம்முலட்சுமிபிரியா இராமகிருஷ்ணன் குத்து விளக்கேற்றினார்.
இயற்பியல் துறைத்தலைவர் பேராசிரியர். மீ.உமாமகேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார். ஸ்ரீ பாரதி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாகி வி.பி.ஆர்.தினேஷ்பாபு உலக மகளிர் தினத்தை பற்றியும், மற்றும் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு குறித்தும் உரையாற்றினார்.
கல்லூரி முதல்வர் முனைவர். இரா.தர்மராஜ் தலைமையுரை ஆற்றினார்.
இவ்விழாவில் தில்லிப் பல்கலைக்கழகத்தின் தமிழாய்வுத்துறை பேராசிரியர் கவிஞர்.முனைவர். தி.உமாதேவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார்.
கணினி அறிவியல் துறைத்தலைவர் பேராசிரியர். இரா.குணசேகரன் நன்றியுரையாற்றினார்.
இவ்விழாவில் கல்லூரி மாணவிகள் சுமார் 1,500 பேர் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த ஐம்பெரும் விழா மார்ச் 11-ந்தேதி வரை நடைபெறும்.
–மு.ராமராஜ்.