சிறுபான்மையினரை கேவலப்படுத்தும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை கண்டித்தும், அதை கை கட்டி வேடிக்கைப் பார்க்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், திருச்சியில் மாபெரும் கவன ஈர்ப்பு கண்டன ஆர்பாட்டம் இன்று (11.03.2018) காலை நடைப்பெற்றது.
கிறிஸ்துவ சிறுபான்மையின மக்களையும், அவர்கள் நடத்தும் கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்களையும், அவர்கள் செய்து வரும் சேவைகளையும் கொச்சைப்படுத்தும் நோக்கத்துடன் ஹெச்.ராஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் வன்முறையை தூண்டும் வகையில் அத்து மீறி சட்ட விரோதமாக செயல்பட்டு வருவதாகவும், இதை மத்திய, மாநில அரசுகள் கை கட்டி வேடிக்கைப் பார்ப்பதாகவும், குறிப்பாக, செங்கல்பட்டு செயிண்ட் ஜோசப் கருணை இல்ல விவகாரத்தில் ஹெச். ராஜாவின் நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும், சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட இறக்கும் தருவாயில் உள்ள வயதான நோயாளிகளை பராமரித்து, நல்லடக்கம் செய்வதுதான் செயிண்ட் ஜோசப் கருணை இல்லத்தின் முக்கிய சேவை என்றும், இதில் எந்த முறைக்கேடும் நடைபெறவில்லை என்றும், முதியோர்களை கடத்தி, எலும்பை விற்பனை செய்கிறார்கள் என்பது திட்டமிட்ட பொய் பிரசாரம் என்றும், இந்த கண்டன ஆர்பாட்டத்தில் தெரிவித்தனர்.
இந்த கண்டன ஆர்பாட்டத்தில் கீழ் காணும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த கண்டன ஆர்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
பல்வேறு சபைகளைச் சேர்ந்த பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள், இளைஞர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் இதில் கலந்துக் கொண்டனர்.
-கே.பி.சுகுமார்.