வாகனச் சோதனையின்போது நிறுத்தாமல் சென்ற இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்த போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் ஜாமீன் மனு மார்ச் 16 -தேதிக்கு ஒத்தி வைப்பு!

வாகனச் சோதனையின்போது நிறுத்தாமல் சென்ற இருசக்கர வாகனத்தைப் போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் துரத்திச் சென்று, திருச்சி, திருவெறும்பூர். கணேசபுரம் பெல் ரவுண்டானா அருகே எட்டி உதைத்ததால், சாலையில் விழுந்த உஷா என்ற  பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ்.

இந்த வழக்கில் போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரை மார்ச் 21-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், மேற்படி சம்பவத்தில் உயிரிழந்த உஷா கருப்பை காலியாகதான் இருப்பதாக (குழந்தை இல்லை) அவரது மருத்துவ மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை  தெரிவிக்கின்றது.

உயிரிழந்த உஷா.

இந்நிலையில், போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ்  தரப்பில் கொடுக்கப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணை, இன்று (14.03.2018) காலை விசாரணைக்கு வந்தது. இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை 16.03.2018 -க்கு நீதிபதி ஒத்தி வைத்தார். 

அதேபோல் மேற்படி சம்பவத்தின் போது காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் ஏற்பட்ட கலவரத்தில் 14 புறநகர் பேருந்துகளும், 12 நகர பேருந்துகளும், 4 காவல்துறை வாகனங்களும், 1 வருவாய்துறை வாகனமும் சேதமடைந்தது. ஒரு பெண் போலிசார் உள்பட காவல்துறை சார்பில் 3 பேர் காயமடைந்தனர். போலிசார் தடியடி நடத்தியதில் போராட்டத்தில் ஈடுப்பட்ட பலபேருக்கு இரத்த காயம் ஏற்பட்டது.

இது சம்மந்தமாக 26 நபர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மேற்படி 26 நபர்களின் தரப்பில் கொடுக்கப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணை, இன்று (14.03.2018) காலை விசாரணைக்கு வந்தது. இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்று மாலை 4 மணிக்கு  நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.

இன்று மாலை ஜாமீன் வழங்கப்பட்டால், அவற்றின் உத்தரவு இன்று மாலை 6 மணிக்குள் சிறைத்துறைக்கு கிடைத்தால், இன்றோ (அல்லது) நாளையோ இவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், முடிவு நீதிபதியின் கையில்தான் இருக்கிறது.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

One Response

  1. venkataraman March 14, 2018 5:14 pm

Leave a Reply