திருச்சி, திருவெறும்பூர், கணேசபுரம் பெல் ரவுண்டானா அருகே போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் துரத்திச் சென்று இருசக்கர வாகனத்தைப் எட்டி உதைத்ததால், சாலையில் விழுந்த உஷா என்ற பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேற்படி சம்பவத்தின் போது காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் ஏற்பட்ட கலவரத்தில் திருவெறும்பூர், பாய்லர் பிளாண்ட், துவாக்குடி ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 26 நபர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், மேற்படி 26 நபர்களின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணை திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி எஸ்.குமரகுரு முன்னிலையில் இன்று (14.03.2018) காலை விசாரணைக்கு வந்தது. இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்று மாலை 4 மணிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
இதுக்குறித்து இன்று பிற்பகல் 3 மணிக்கு நமது “உள்ளாட்சித்தகவல்” ஊடகத்தில் விரிவாக செய்தி வெளியிட்டு இருந்தோம்.
இந்நிலையில் இன்று மாலை நடைப்பெற்ற விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒவ்வொரு நபரும் தலா.ரூ.500 டெபாசிட் கட்ட வேண்டும்; ஒவ்வொரு நபருக்கும் இரண்டு பேர் ரூ.10.000 மதிப்பில் ஜாமீன் உத்ரவாதம் அளிக்க வேண்டும்; தினமும் காலை 10 மணிக்கு வழக்கு பதிவு செய்யப்பட்ட காவல் நிலையங்களில் கையெழுத்து போடவேண்டும்.- என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் ஜாமீன் வழங்கி, திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி எஸ்.குமரகுரு உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதி வழங்கிய ஜாமீன் உத்தரவின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.
–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com