திருச்சி, திருவெறும்பூர், கணேசபுரம் பெல் ரவுண்டானா அருகே போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் இருசக்கர வாகனத்தைப் எட்டி உதைத்ததால், உஷா என்ற பெண் சாலையில் விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது சம்மந்தமாக பாய்லர் பிளாண்ட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முக சுந்தரம் வழக்கு பதிவு செய்து முதற்கட்ட விசாரணையை நடத்தி வந்தார்.
இதற்கிடையில் ஒரு காவல் ஆய்வாளரின் குற்ற வழக்கை, ஒரு காவல் ஆய்வாளர் அந்தஸ்தில் உள்ளவரே விசாரிப்பது முறையாக இருக்காது என்பதால், அதைவிட கூடுதல் அந்தஸ்தில் உள்ள மாவட்ட குற்றப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் புகழேந்தியிடம் இவ்வழக்கு விசாரணை ஒப்படைக்கப்பட்டது.
இதில் திருப்தியடையாத அப்பெண்ணின் கணவர் ராஜா, உஷாவின் வழக்கை சிபிசிஐடி- (Crime Branch-Crime Investigation Department-CB-CID) விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று, உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
Unmayil nadandathu yenna Trafic RI always traveling in Jeep avar scoteril vandara avar than yetti udaithara allathu Policekku bayandu Rajausha thambadhigal salaiyil ulla barigurdil idithu vilundargala? RI kku kettapeyar yerpad makkal sadiya? Ungal media unmayai kandupidikkuma?