பல்வேறு கருத்து முரண்பாடு காரணமாக, பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து (National Democratic Alliance), ஆந்திரா முதலமைச்சர் நா.சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி இன்று வெளியேறியது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் நா.சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
மாநில மறுசீரமைப்பு திட்டத்தில் உள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தோல்வி அடைந்ததால், தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேற முடிவு செய்துள்ளதாகவும், இந்த முடிவை இன்று பொலிட்பீரோ உறுப்பினர்களுடன் தொலைபேசி மூலம் கலந்துரையாடி ஏகமனதாக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், ஆந்திரா முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான நா.சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
500,1000 Demonitaitation saidal karuppupanam kandupidikkapadum yenruarivithu, katchikararka, congress kararkal sasikala, Sekar reddy, pondravargal than makkalukumunnal note marriyavargal. Makkalukku orupriyojanamum illai. Kaveri issue modi ninathal 216tmc ok annal karnatka electionmunnittu taminatukku pepay.Chandrababu manasthan vakkuruthi maranda thalaivanudan payanam seiya virumbavillai. Tamilnadu MP kkal sindipargala.