திருச்சி, ஹெச்.ஏ.பி.பி மற்றும் துப்பாக்கி தொழிற்சாலையில் மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் நிர்மலா சீத்தராமன் ஆய்வு! 

திருச்சி, திருவெறும்பூர் அருகே மத்திய பாதுகாப்பு படைகல தொழிற்சாலைகளான ஹெச்.ஏ.பி.பி மற்றும் துப்பாக்கி தொழிற்சாலை ஆகிய நிறுவனங்கள் உள்ளது. அந்த நிறுவனங்களை மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று மதியம் தனிதனியே ஆய்வு செய்தார்.

முதலில் ஹெச்.ஏ.பி.பி தொழிற்சாலைக்கு இன்று மதியம் 2.10 மணிக்கு வந்த நிர்மலா சீத்தாராமன், ஆலைக்குள் மரகன்றுகளை நட்டார். பின்னர் ஹெச்.ஏ.பி.பி நிறுவனத்தில் தயாரிக்கப்படும் ஆயுதங்கள் மற்றும் தயாரிக்கப்படும் இடங்களையும் நேரில் ஆய்வு செய்தார். அப்போது ஹெச்.ஏ.பி.பி பொதுமேலாளர் ஒய்ஸ்ஷோமுரா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

பிற்பகல் 3 மணிக்கு ஹெச்.ஏ.பி.பி நிறுவனத்தில் தனது ஆய்வை முடித்து கொண்டு, 3.10 மணிக்கு துப்பாக்கி தொழிற்சாலைக்கு வந்தார். அப்படி வந்தவர் துப்பாக்கி தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் துப்பாக்கிகளை பார்வையிட்டார். பின்னர் துப்பாக்கிதொழிற்சாலை பொதுமேலாளர் ஷிரீஷ்காரே  மற்றும் உயர் மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

துப்பாக்கி தொழிற்சாலை எம்ளாய்ஸ் யூனியன் நிர்வாகி சரவணன் தலைமையில், அமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் திருச்சியில் தயாரிக்கப்படும் திருச்சி அசால்ட் ரைபிள் துப்பாக்கிக்கு ஆடர்களை வழங்க வேண்டும். மேலும், திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை வளர்ச்சிக்கு வழி செய்யவேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

அதேப்போல் திருச்சி ஆயுத தொழிற்சாலை அனைத்து இந்திய காங்கிரஸ் தொழிலாளர் முன்னனி கௌரவத்தலைவர் அருள்சேவியர் தலைமையில், தலைவர் ராஜூ, பொதுச்செயலாளர் சத்தியா மற்றும் நிர்வாகிகள் படைகல தொழிற்சாலைகளை தனியார் மயமாக்க கூடாது; திருச்சியில் தயாரிக்கப்படும் அசால்ட் ரைபிள் துப்பாக்கியை ராணுவத்திற்கு பயன்படுத்துவதற்கு ஆடர் வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அந்த மனுக்களை பெற்று கொண்ட அமைச்சர் நிர்மலா சீத்தராமன், படைகல தொழிற்சாலை தனியார் மயமாக்கப்படும் என்று வரும் வந்திகளை நம்ப வேண்டாம் என்றும், மேலும், ராணுவத்திற்கு திருச்சி அசால்ட் ரைபிள் துப்பாக்கியை பயன்படுத்துவதற்கு உரிய ஆடர்களை விரைவில் வழங்குவதாகவும் அமைச்சர் தெரிவித்ததாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். 

மேலும், அவசரமாக வேறு ஒரு முக்கிய நிகழ்சிக்கு அமைச்சர்  செல்லவேண்டி இருந்ததால், துப்பாக்கி தொழிற்சாலையில் நடவேண்டிய மரகன்று நடுவிழா மற்றும் துப்பாக்கி தொழிற்சாலை கிரனேட் ரேஞ்ச் தளத்திற்கு சென்று துப்பாக்கி சுடும் சோதனையை பார்வையிடுவதையும், தவிர்த்து விட்டு அவசர, அவசரமாக இன்று மாலை 4 மணிக்கு துப்பாக்கி தொழிற்சாலையை விட்டு, அதிகாரிகளுடன் அமைச்சர் நிர்மலா சீத்தராமன் அங்கிருந்து புறப்பட்டார்.

நாளை துப்பாக்கி தொழிற்சாலை மற்றும் ஹெச்.ஏ.பி.பி தொழிற்சாலையில் படைகல தொழிலக தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாரமனின் திடீர் ஆய்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

-ஆர்.சிராசுதீன்.

-எஸ்.திவ்யா.

 

Leave a Reply