திருச்சி, திருவெறும்பூரில் ஒரேப் பகுதியில் இரண்டு நாட்களாக கொள்ளையர்கள் தொடர்ந்து கைவரிசை காட்டி வருவதால், திருவெறும்பூர் பகுதி கடை உரிமையாளர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
திருவெறும்பூர் பகுதியை சேர்ந்தவர் சையது(31), இவர் நவல்பட்டு ரோட்டில் செல்போன் சேல்ஸ் மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். நேற்று நள்ளிரவு கடையின் சட்டரை கடப்பாரையால் நெம்பி உடைத்து கடைக்குள் சென்ற கொள்ளையர்கள் கடைக்குள் இருந்த ரூ.60 ஆயிரம் பணம் மற்றும் உயர் ரக செல்போன்களை திருடிகொண்டு வெளியில் வந்தப்போது அந்தப் பகுதிகளில் உள்ள நகை கடைகளுக்கு வாட்சுமேனாக உள்ள வைரப்பன்(65) 3 கொள்ளையர்களையும் பிடிக்க முயன்றுள்ளார்.
ஆனால், கொள்ளையர்கள் வைரப்பனை கீழே தள்ளிவிட்டு, அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இந்நிலையில், இன்று காலை இச்சம்பவம் குறித்து கடை உரிமையாளர் சையதுக்கு தகவல் கிடைத்தும் கடைக்கு வந்த பார்வையிட்டர். பின்னர் இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
அதன் பிறகே அந்தப் பகுதியில் உள்ள காஜா சென்டருக்கு சொந்தமான குடடோன் ஒன்று அந்த செல்போன் கடை அருகே உள்ளது. அந்த கடையையும் கொள்ளையர்கள் முதல் உடைத்து பார்த்துள்ளதும் ஆனால், அந்த கடையில் பழைய தையல் இயந்திரங்கள் மட்டும் இருந்ததால் ஏமாற்றமடைந்துள்ளனர்.
அதன் பிறகுதான் செல்போன் கடையை உடைத்து கொள்ளையடித்து சென்றதும் பொதுமக்களுக்கு தெரியவந்தது. மேலும், இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
நேற்று இந்த கொள்ளை நடந்த 50 மீட்டர் தூரத்தில் உள்ள காந்நிநகர் முத்து மாரியம்மன் கோவில் உண்டியலை மர்ம நபர் கடப்பாரையால் உடைத்து கொள்ளயைடிக்க முயன்றப் போது அலாரம் அடித்ததால் அங்கிருந்து கொள்ளையன் மற்றும் கோவில் வெளியில் நின்ற அவனது கூட்டாளிகள் இரண்டு பேர் உட்ட 3 பேர் தப்பி சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர்கள்தான் இந்த செல்போன் கொள்ளையிலும் ஈடுப்பட்டிருக்க கூடும் என்று போலீசார் கூறுகின்றனர். அதுவும் அடுத்த அடுத்த நாளில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பொது மக்களிடமும், வியாபாரிகளிடமும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக கண்காணித்தால் மடடும்தான் இப்பகுதியில் குற்றச் சம்பவங்களை தடுக்க முடியும்.
-ஆர்.சிராசுதீன்.