ஏற்காடு சன்னியாசி மலைப்பகுதியில் விதை பந்துகளை தூவிய வரலாற்று ஆய்வு குழுவினர்! 

சேலம் மாவட்டம், ஏற்காடு பொட்டானிக்கல் கார்டன் அருகே உள்ள சன்னியாசி மலைப்பகுதியில் வராலாறு குறித்து ஆய்வு செய்யும் ஏற்காடு வரலாற்று ஆய்வு மையத்தினர், இன்று மாலை தங்கள் குடும்பத்தினருடன் சென்று விதைகள் மற்றும் விதை பந்துகளை தூவினர். 

அறிவியல் எழுத்தாளர் ஏற்காடு இளங்கோ தலைமையில் நீலகிரி கிருஷ்ணமூர்த்தி, ராஜ கார்த்திக், ராமகிருஷ்ணன், தேவபிரகாஷ், மையூர் காம்லே, சரவணன் ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து புங்கன், முள் முருங்கை, மருது உள்ளிட்ட செடிகளின் 2000 விதைகளும், காட்டு சுண்டை விதை 3 கிலோவும் தூவினர். 

-நவீன் குமார்.

Leave a Reply