காவிரி விவகாரத்தில், மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை, கர்நாடகா அரசின் சட்ட விரோத நடவடிக்கை, உச்ச நீதிமன்றத்தின் மென்மையான போக்கு மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களின் அலட்சியத்தாலும், தனிப்பட்ட ஆதாயத்திற்காகவும் ஆறு, கால்வாய், ஏரி, குளம் குட்டைகளில் உள்ள மண் மற்றும் மணல் கொள்ளை மற்றும் நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு, மோசமான நீர் மேலாண்மை…ஆகிய காரணங்களால், காவிரி டெல்டா பகுதிகள் அனைத்தும் இன்று பாலைவனமாக மாறியுள்ளது.
எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளையும் போர்கால அடிப்படையில் பாதுகாத்து பராமரிக்கவில்லையென்றால், இன்று காவிரி டெல்டா பகுதிகளுக்கு ஏற்பட்ட நிலை, தமிழகம் முழுமைக்கும் ஏற்படும்.
-க.மகேஷ்வரன்.