திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் கல்லூரி மாணவ, மாணவிகள் பயணம் செய்த கார் தலைக்குப்புற கவிழ்ந்ததில் ஒருவர் பலி!- 6 பேர் படுகாயம்.

திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தேவராயநேரி அருகே இன்று (14.04.2018) மாலை 4.30 மணியளவில் அதிவேகமாக வந்த கார் ஒன்று தலை குப்புற கவிழ்ந்ததில், காரில் இருந்த 10 நபர்களில் ஒருவர் பலியானார், 6 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் கல்லூரி மாணவ, மாணவிகள்  என்பது அதிர்ச்சியளிக்கும் தகவலாக உள்ளது.

CHEVROLET TAVERA TN 49 AQ 7760 என்ற காரில், பிரசாந்த் (முதலாம் ஆண்டு BSC), மனுவர்ஷன் (முதலாம் ஆண்டு BSC), ஜோதி ஐஸ்வர்யா (முதலாம் ஆண்டு BSC), பிரியா (முதலாம் ஆண்டு BCA),ராகுல் (முதலாம் ஆண்டு சிவில் இன்ஜினியர்),மோதிஸ் (முதலாம் ஆண்டு சிவில் இன்ஜினியர்),நிவாஸ் (முதலாம் ஆண்டு சிவில் இன்ஜினியர்), திலக்,கௌதம்

ஆகியோர் புத்தாண்டை கொண்டாடுவதற்காக, திருச்சியில் உள்ள தனியார் உணவகத்திற்கு இன்று காலை காரில் சென்றுள்ளனர். இதில் ஜோதி ஐஸ்வர்யா என்பவருக்கு பிறந்த நாள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் காரில் பயணம் செய்துள்ளனர். காரை பெரியார் மணியம்மை கல்லூரியில் முதலாம் ஆண்டு சிவில் இன்ஜினியரிங் படிக்கும் தாரிக் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தேவராயநேரி அருகே இன்று (14.04.2018) மாலை 4.30 மணியளவில் அதிவேகமாக வந்த கார், தலை குப்புற கவிழ்ந்ததில், காரில் இருந்த 10 நபர்களில் முதலாம் ஆண்டு BCA படிக்கும் பிரியா என்ற மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து துவாக்குடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதில் பெரிய கொடுமை என்னவென்றால், விபத்துக்குள்ளான இந்த காருக்கு (TN 49 AQ 7760) இன்சூரன்ஸ் காலாவதியாகி 42 மாதங்களுக்கு மேலாகிறது. ஆனால், இதுவரை புதுப்பிக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பெற்று, வளர்த்து, ஆளாக்கி, படிக்க வைத்து சமூகத்தில் ஒரு கௌரமான நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காக,  இரவு, பகல் பாராது தங்கள் ரத்தத்தை வியர்வையாக சிந்தி, உழைத்து வருகின்றனர்.

ஆனால், அதையெல்லாம் கொஞ்சம் கூட கவனத்தில் கொள்ளாமல் “இளம் கன்று பயம் அறியாது” என்ற பழமொழிக்கேற்ப, இதுபோன்ற விபத்துக்களிலும், ஆபத்துக்களிலும் சிக்கி சீரழிவதை நினைக்கும் போது, உண்மையிலுமே நெஞ்சம் பதைக்கிறது.

பெற்றோர்களின் அனுமதி மற்றும் துணையில்லாமல் நண்பர்களோடு வெளியில் (அல்லது) வெளியூர் செல்வதை கல்லூரி மாணவ, மாணவிகள் தயவு செய்து முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

அதுதான் அவர்களுக்கும் நல்லது; அவர்களின் குடும்பத்தாருக்கும் நிம்மதி.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

 

 

 

Leave a Reply