சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதை யாத்திரையாக சென்ற இருபெண்கள், தரமற்ற சிமெண்ட் பலகை சேதமடைந்து காவிரி ஆற்றுக்குள் விழுந்தனர்.

திருச்சி அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதை யாத்திரையாக சென்றவர்களில் இருபெண்கள் இரவு 11.15 மணியளவில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காவிரி ஆற்றுப் பாலத்தின் நடைமேடையில் நடந்து சென்றபோது, தரமற்ற சிமெண்ட் பலகை சேதமடைந்து காவிரி ஆற்றுக்குள் விழுந்தனர். இதைக் கண்ட அவர்களின் பின்னால் சென்ற பக்தர்கள் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர்.

காவல்துறையினருக்கும், 108 ஆம்புலன்ஸ்க்கும், தகவல் தெரிவித்துவிட்டு ஆற்றுக்குள் விழுந்த பெண்களை காப்பாற்றுவதற்காக ஆற்றுக்குள் இறங்கி ஓடினர். இரவு நேரம் என்பதாலும், காவிரி ஆற்றின் நடுபகுதியில் விழுந்து கிடந்தாலும், மிகுந்த சிரமத்திற்கிடையில் இருபெண்களையும் தூக்கி வந்து கரைச்சேர்த்தனர். அதற்குள் 108 ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தது. அதன்பின் காவல்துறையினரின் உதவியுடன் திருச்சி மகாத்மா காந்தி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.

இதுக்குறித்து திருச்சி கோட்டை காவல் நிலைய போலிசார் விசாரித்து வருகின்றனர். இதனால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 40 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மற்றவர்கள் யாரும் விழுந்துவிட கூடாது என்பதற்காக, சம்பவ இடத்தில் நெடுஞ்சாலை ரோந்து பணி போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

தமிழக பொதுப்பணித்துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறையினரின் தரமற்ற பணிகளும், அலட்சியமுமே, மேற்கண்ட அசம்பாவிதற்கு காரணம்.

எனவே, இதற்கு பிறகாவது ஆற்றுப் பாலங்களில் உள்ள நடை மேடைகளை தரப்பரிசோதனை செய்வார்களா? பொறுத்திருந்துப் பார்ப்போம்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

 

Leave a Reply