இலங்கையில் கடந்த இரண்டு வாரங்களாக திருகோணமலை துறைமுக கடல் பகுதியில் சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 101 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து படகுகள், அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகள், சட்ட விரோதமாக பிடிக்கப்பட்ட 6,240 கிலோ மீன்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
-என்.வசந்த ராகவன்.