ஏற்காட்டில், உலக மலேரிய தினத்தையொட்டி விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் உள்ள “முருகன் நகர்” கிராமத்தில் “ உலக மலேரியா” தினத்தையொட்டி, மருத்துவ துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வகுமார் தலைமையில் நடைப்பெற்ற இம்முகாமில், மலேரியா வராமல் பாதுகாத்து கொள்வது குறித்தும், தங்கள் வீடுகள் மற்றும் வீட்டை சுற்றியுள்ள பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் எவ்வாறு தடுப்பது குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

மேலும் சுகாதார ஊழியர்கள்  முருகன் நகர் கிராமம் முழுவதும் வீடு வீடாக சென்று கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் விதத்தில் வீட்டிற்கு வெளியே உள்ள பாத்திரம் மற்றும் மூடி இல்லாமல் இருக்கும் தண்ணீர் தொட்டிகளை கண்டறிந்து அவற்றை அப்புறப்படுத்தி வீட்டு உரிமையாளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர். மேலும் வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டி, பொது கிணறுகளில் குளோரின் மருந்து தெளித்தனர்.

-நவீன் குமார்.

Leave a Reply