காவிரி உரிமை மீட்பு உறுதி ஏற்பு ஒன்று கூடல் கூட்டம் கல்லணையில் நடைப்பெற்றது!

வீரப்பன் மனைவி முத்துலெட்சுமி.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, தஞ்சாவூர் மாவட்டம், கல்லணையில் காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் உரிமை மீட்பு உறுதி ஏற்பு ஒன்று கூடல் நிகழ்சி இன்று நடைப்பெற்றது.

இந்நிகழ்சிக்கு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமையில், கல்லணையில் உள்ள கரிகாலச்சோழன் சிலை மற்றும் காவிரி அம்மன், ராஜராஜசோழன் சிலைகளுக்கு மாலை அணிவித்து, ஊர்வலமாக கல்லணை தோகூர் பேருந்து நிலையத்தில் உள்ள விழா மேடைக்கு வந்து சேந்தனர்.

பின்னர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து உறுதி மொழி ஏற்றனர்.

இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, கௌதமன், ராம், அமீர் பேரரசு, வெற்றிமாறன், அருண்குமார், வி.சேகர், லெனின் பாரதி, ஹீரா, ஐந்து கோவலன் உள்ளிட்ட திரை உலக பிரமுகர்களும், தமிழ் தேசிய முற்போக்கு சங்க பொறுப்பாளர் அயினாவரம் முருகேஷ், வீரப்பன் மனைவி முத்துலெட்சுமி, தமிழக விவசாய சங்க தஞ்சை மாவட்ட தலைவர் மணிமொழி, சமவெளி விவசாய சங்க தலைவர் பழனிராஜன், ஐ.ஜே.கே. மேற்கு மாவட்ட தலைவர் சிமியோன் சேவியராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 -ஆர்.சிராசுதீன், வீ.குணசேகரன்.

 

 

Leave a Reply