திருவாரூர் ஸ்ரீதியாகராஜர் திருக்கோவிலில் ஆழித்தேரோட்டத்திற்கு தயாராகும் தேர்!

திருவாரூர் ஸ்ரீதியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் உலக பிரசித்தி பெற்ற தேரோட்டமாகும். இத்தேரோட்டத்திற்காக தேர் செப்பனிடும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இத்திருத்தலமானது வரலாற்று சிறப்புமிக்க தலமாகவும், சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் இருந்து வருகிறது.

இக்கோயிலின் ஆழித்தேர் ஆசிய கண்டத்திலேயே 2வது மிகப்பெரிய தேர் என்று அழைக்கப்படுகிறது. மற்ற ஊர் தேர்களை போல் இல்லாமல் எண்கோண வடிவில் 20 பட்டைகளாக சுமார் 350 டன் எடையில் அமைக்கப்பட்டுள்ள இந்த தேரானது, முதன் முறையாக திருச்சி பெல் நிறுவனத்தின் உதவியுடன் ஹைட்ராலிக் வீல் பெருத்தப்பட்டு தயாராகி வருகிறது.

திருமுறையில் பாடல் பெற்ற 24.5 அடி நீளம், 1.5 அடி உயரம் கொண்ட 2 இரும்பு அச்சுக்களில் 9 அடி விட்டம், 1.5. அடி அகலம், 4 இரும்பு சக்கரங்களின் மேல் வர்ணிக்க இயலாத கலை பொக்கிஷமான சிற்பங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன.

-க.மகேஷ்வரன்.

Leave a Reply