ஏற்காட்டில், நீலமலை தோட்ட தொழிலாளர் சங்கத்தினர் மே தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

மே தினத்தை முன்னிட்டு, ஏற்காட்டில் நீலமலை தோட்ட தொழிலாளர் சங்கம் சார்பில் பேரணி நடைப்பெற்றது.

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் நீலமலை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் மே தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் சங்க தலைவர் பாக்கியம் தலைமையில் பொதுக்கூட்டம் துவங்கி நடைப்பெற்றது. மே தின பேரணி சங்கத்தின் பொது செயலாளர் நல்லமுத்து தலைமையில், ஒன்டிக்கடை அண்ணா சிலை அருகே துவங்கப்பட்டு அண்ணா பூங்கா, ஏற்காடு பஸ் நிலையம், கடை வீதி, காந்தி பூங்கா உள்ளிட்ட பகுதிகளை கடந்து பொதுக்கூட்ட திடலில் நிறைவடைந்தது.

துணை தலைவர் பழனிசாமி அனைவரையும் வரவேற்றார். பொது செயலாளர் நல்லமுத்து சிறப்புரை ஆற்றும்போது பேசியதாவது: “ கேரளாவில் தோட்ட தொழிலாளர்களின் ஊதியம் ரூ.350 என அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் ரூ.300க்கும் குறைவாகவே உள்ளது. எனவே, இந்த ஊதிய உயர்வை கேட்டு நாம் விரைவில் போராட்டம் நடத்த உள்ளோம். மேலும் ஐ.என்.டி.யு.சி.யின் மாநில செயற்குழு கூட்டத்தை ஏற்காட்டில் விமர்சையாக நடத்த வேண்டும். மேலும் அகில இந்திய தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் அனைத்து போராட்டங்களிலும் நாம் வீரியத்துடன் கலந்து கொள்ள வேண்டும்” இவ்வாறு பேசினார்.

இக்கூட்டம் மற்றும் பேரணியில் சங்கத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார், தேவனேசன், மணிவண்ணன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

-நவீன் குமார்.

Leave a Reply