காமராஜ் பவுண்டேஷன் ஆப் இந்தியா என்ற அமைப்பின் சார்பில், திருச்சி, லால்குடியில் இன்று விவசாய மாநாடு நடைப்பெற்றது.
இதில் தமிழகத்தில் உள்ள பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் கலந்துக் கொண்டு கருத்துரை வழங்கினார்கள்.
இதில் கலந்துக்கொண்ட தேசிய மற்றும் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் அய்யாக்கண்ணு நமது “உள்ளாட்சித்தகவல்” ஊடகத்திற்கு பிரத்தியோகமாக பேட்டி அளித்தார்.
அப்போது, காமராஜர் ஆட்சிக் காலத்து விவசாயம் வேண்டும் என்று வலியுறுத்தினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பிரதமரை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கும்படி, தமிழக முதலமைச்சர் கடிதம் கொடுத்தும் கூட, பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சரை அழைத்து பேசாமல் இருப்பது, சந்திக்க மறுப்பது, ஜனநாயக விரோதம்; கொடுமையிலும் கொடுமை.
இவ்வாறு அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
-ரா. ரிச்சி ரோஸ்வா.