திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில், பொன்னகர் அருகில் தேசிய கல்லூரி (National College) இருக்கிறது. இக்கல்லூரிக்கு எதிரில் வேகத்தடை இல்லாதக்காரணத்தால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது.
இதுக்குறித்து 18.02.2018, 26.02.2018 ஆகிய தேதிகளில் நமது ”உள்ளாட்சித்தகவல்” ஊடகத்தில் விரிவாக செய்தி வெளியிட்டு இருந்தோம். ஆனால், தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், இன்று (14.05.2018) காலை 9.20 மணியளவில் இந்த இடத்தில் சாலையை கடப்பதற்கு முயற்சித்த இரண்டு இருசக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதில், நிலைக்குலைந்து சாலையில் விழுந்தார்கள். இதில் பீட்டர் பிரின்ஸ் ஜீலி என்பருக்கு தலையில் காயம் ஏற்பட்டு மயக்கமானார். ஞானப்பிரகாசம் என்பருக்கு காலில் அடிப்பட்டு நடக்க முடியாமல் அவதிப்பட்டார். தலையில் காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்த பீட்டர் பிரின்ஸ் ஜீலி என்பவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆட்டோவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினர் காலில் அடிப்பட்டு நடக்க முடியாமல் அவதிப்பட்ட ஞானப்பிரகாசம் என்பவரை ஆட்டோவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுக்குறித்து திருச்சி மாநகர போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த விபத்துக் குறித்து காவல்துறையினர் விசாரித்து கொண்டு இருக்கும்போதே, இந்த இடத்தில் சாலையை கடப்பதற்கு முயற்சித்த மோட்டார் சைக்கிள் மீது, அதிவேகமாக வந்த மோட்டார் பைக் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றவர்கள் நிலைக்குலைந்து சாலையில் விழுந்தார்கள். அதிஷ்டவசமாக அவர்கள் மயிரிழையில் உயிர் தப்பினார்கள். கொஞ்சம் தாமதித்து இருந்தால், பின்னால் வந்த வாகனம் அவர்களை சின்னாப் பின்னாமாக்கி இருக்கும்.
வேகத்தடை இல்லாதக்காரணத்தால் இங்கு தினந்தோறும் ஏதாவது அசம்பாவிதங்கள் நடைப்பெற்றுக் கொண்டேதான் இருக்கிறது. வேகத்தடை அமைக்க வேண்டிய தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
இதுக் குறித்த முந்தைய பதிவுகளுக்கு கீழே உள்ள இணைப்புகளை கிளிக் செய்யவும்.