தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயம்பட்டவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.
முடக்கப்பட்ட இண்டர்நெட் சேவையை விடுவிக்க வேண்டும்.
காயம்பட்டவர்களை பார்வையிட்டு காயங்களின் தன்மை குறித்து ஆராய்ந்து உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைக்கவேண்டும்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பல பேர் மனு தாக்கல் செய்து இருந்தனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் டி.கிருஷ்ணக்குமார், ஆர்.சுரேஷ்குமார் முன்பு இன்று நடைப்பெற்றது.
இதனை ஏற்ற நீதிபதிகள், இணைய முடக்கம் விடுவிப்பு, தனியார் மருத்துவ சிகிச்சை தொடர்பான கோரிக்கை தொடர்பாக தமிழக அரசு பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவிட்டுள்ளனர். துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தமிழக உள்துறை செயலாளர் பதிலளிக்கவும், சிபிஐ-க்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதுக்குறித்த ஒரு விரிவான அறிக்கையை 06.06.2018-க்கு முன்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு தூத்துக்குடி மாவட்ட சட்ட சேவை ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com