திருச்சியில் இன்று வீசிய கடுமையான சூறாவளி காற்றில் மரங்கள், மின் கம்பங்கள், மின் மாற்றிகள் பல இடங்களில் சேதமடைந்தன.
இதனால் மாவட்டம் முழுவதும் சுமார் 5 மணி நேரங்களுக்கு மேல் மின் தடை ஏற்பட்டது. இன்னும் பல கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன. மின் வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணிகளில் தொடர்ந்து ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருச்சி மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் சாலையில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தடுப்புகள் (Barry Guard) அனைத்தும், இன்று வீசிய சூறாவளி காற்றில் சுருண்டு விழுந்தன. இதனால் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் அனைவரும் பதட்டமடைந்தனர்.
எனவே, சாலையில் வைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு தடுப்புகள் அனைத்தையும் கீழே சாய்ந்துவிடாதவாறு இரும்பு சங்கிலிகளைக் கொண்டு இணைத்து இருமுனைகளையும் இரும்பு கம்பத்தை ஊன்றி கட்டிவைக்க வேண்டும். இதனால் பாதுகாப்பு தடுப்புகளும் பத்திரமாக இருக்கும், சாலையில் பயணம் செய்பவர்களும் நிம்மதியடைவார்கள்.
மற்ற இடத்திற்கு பாதுகாப்பு தடுப்புகள் (Barry Guard) தேவைப்படும் பட்சத்தில் இரும்பு சங்கிலியை விடுவித்து தாராளமாக எடுத்துச்செல்லலாம்.
எனவே, போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?
-கே.பி.சுகுமார்.