சேலம் மாவட்டம், ஏற்காடு, புனித ஜோசப் மேல் நிலைப் பள்ளியில் இன்று போதை பொருள் மற்றும் போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. பள்ளி முதல்வர் பிரிட்டோ லூர்துசாமி தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் ஏற்காடு காவல் ஆய்வாளர் ஆனந்தன் கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.
“போதை பொருட்களை பயன்படுத்துவதால் மனிதன் தனது சுய நினைவை இழந்து மிருகமாக மாறுகிறான். இதனால் பல்வேறு விளைவுகளை அவனும், அவனது குடும்பம் மட்டுமின்றி அவனை சார்ந்தவர்களும் பாதிக்கின்றனர். எனவே, நாமும் நம்மை சார்ந்தவர்கள் போதை பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். மேலும், சாலையில் பயணிக்கும் போது போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். பஸ்சில் செல்லும் போது படியில் நின்றபடி பயணிக்க கூடாது. ”
– நவீன் குமார்.