மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், கடந்த 2015-ம் ஆண்டு முதல், போலி ஆவணங்கள் மூலம் 6,777 பேருக்கு, ஓட்டுநர் உரிமம் வழங்கியதில் ரூ.10 கோடிக்கு மேல் ஊழல் நடைப்பெற்று இருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த ஊழல் மற்றும் முறைக்கேடு சம்மந்தமாக மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அதிகாரி கே.கல்யாணகுமார் உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அவர்களின் பெயர் விபரம்:
மதுரை மாவட்டம், மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கே.கல்யாணகுமார், மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து வாகன ஆய்வாளர்கள் ஜே.பூர்ணலதா, ஏ.கே.முருகன், மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலரின் தனி உதவியாளர் எல்.ரைமான், மதுரை வட்டார போக்குவரத்து அலுவலக கண்காணிப்பாளர் என்.புவனேஸ்வரி, இளநிலை உதவியாளர் எஸ்.சுப்ரமணியன், ஸ்ரீராகவேந்திரா வித்யாலயா பள்ளி முதல்வர் கே.மணிகண்டன், மணி & விஜி ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர் எம்.செந்தில் குமார், ஓம் ஐய்யப்பா ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர் ஜி.ராஜா, நியூ ஜெயலெட்சுமி ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர் கே.ஜெயகுமார், செந்தூர் ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர் எஸ்.பாண்டியராஜன், செல்வி ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர் பி.இளங்கோவன், நிர்மலா தேவி ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர் ஆர்.முருகேசன், கங்காதேவி ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர் என்.நாஹூர் ஹனி, அன்பு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர் எஸ்.அப்துல் மாலிக், தீச்சனா ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர் ஆர்.ராஜா, மீனா ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர் ஜே.நாகராஜ் பிரசாத் ஆகிய 17-பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த ஊழல் மற்றும் முறைக்கேட்டில் முதல் குற்றவாளியாக மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அதிகாரி கே.கல்யாணகுமார் இடம் பெற்று இருப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது.
இதை அடிப்படையாக கொண்டு, இந்தியா முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் உள்ள ஆவணங்களை அதிரடி ஆய்வு செய்தால், இன்னும் பல அதிர்ச்சி தரும் சம்பவங்கள் வெட்ட வெளிச்சமாகும்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com