இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணச் செலவுகள் ஏதோ பரம ரகசியமாக இருப்பதை போலவும், அதை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலமாகதான் தெரிந்துகொள்ள முடியும் என்பதை போலவும், சமூக ஆர்வலர் பிமப்பா கதத்? என்பவர் அதை தங்களிடம் பகிர்ந்து கொண்டதாகவும், பிரபல ஆங்கில ஊடகமான “நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்” மற்றும் அவற்றின் தமிழ் பிரதிபளிப்பாக விளங்கும் “தினமணி” ஆகியவை இன்று செய்திகள் வெளியிட்டு உள்ளன.
இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணத் திட்டங்கள் மற்றும் செலவு விபரங்கள் அனைத்தும், இந்திய பிரதம மந்திரியின் இணைய தளத்திலேயே மிக தெளிவாக தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. இதை உலகத்தில் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் படித்து தெரிந்து கொள்ளலாம். எனவே கை புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை.
இந்த விபரம் “நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்” மற்றும் “தினமணி” செய்தி பிரிவுக்கு தெரியாமல் போனது நமக்கு வியப்பாக உள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணத் திட்டங்கள் மற்றும் செலவு விபரங்களை தெரிந்துகொள்ள கீழ்காணும் இணைப்பை கிளிக் செய்யவும்
http://www.pmindia.gov.in/en/details-of-foreigndomestic-visits/
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com