இலங்கை கடற்பரப்பில் இரண்டு படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்து காரை நகருக்கு அழைத்து வந்து, மருத்துவ சோதனைக்குப் பின்னர் அவர்கள் அனைவரையும் யாழ்ப்பாண கடற்தொழில் கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்தனர். இலங்கை கடலோர காவல்துறை மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-என்.வசந்த ராகவன்.