சந்தேகத்திற்குரிய பதிவு எண் கொண்ட மினி வேன் மோதியதில், இருசக்ர வாகனத்தில் வந்தவர்களுக்கு பலத்த காயம்!-திருச்சி -கல்லணை சாலையில் ஒட்டக்குடி அருகே நடந்த விபரீதம்.

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்த முருகேசன், ராஜா ஆகிய இருவரும் நேற்று (09.07.2018) மாலை 4 மணியளவில் திருச்சி-கல்லணை சாலையில், திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  கீழமுல்லக்குடி ஊராட்சி, ஒட்டக்குடி அருகே இருசக்ர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த போது, சந்தேகத்திற்குரிய பதிவு எண் கொண்ட மினி வேன் ஒன்று, இருசக்ர வாகனத்தின் மீது மோதியதில், இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இருசக்ர வாகனத்தின் மீது மோதிய மினி வேன் முன்னுக்கு பின் முரணாக சந்தேகத்திற்குரிய பதிவு எண் கொண்டதாக உள்ளது. இந்த மினி வேன் திருட்டு வாகனமாக இருக்க வேண்டும் (அல்லது) சாலை பயன்பாட்டிற்கு உபயோகமில்லாத (பர்மிட் இல்லாத) காலாவாதியான வாகனமாக இருக்க வேண்டும்.

இந்த மினி வேனில் பதிவு எண் TN-51 C-566, TN 1C 7566 என்று முன்னுக்கு பின் முரணாக எழுதப்பட்டிருக்கிறது. நாங்கள் விசாரித்தவரை மேற்காணும் பதிவு எண்ணில் தமிழகத்தில் எந்த வாகனமும் இல்லை.

ஆனால், இந்த மினி வேனின் பதிவு எண் TN-51 C-7566 என்று யூகித்தாலும், இந்த பதிவு எண்  POONAMALLEE RTO, NAGAPATTINAM RTO என பல வட்டாரப் போக்குவரத்து அலுவலங்களில் பதிவாகி இருக்கிறது.

எனவே, மேற்காணும் விபத்து சம்மந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டதா? (அல்லது) கட்டப் பஞ்சாயத்து மூலம் சமரசம் பேசப்பட்டதா? என்ற விபரம் இதுவரை தெரியவில்லை.

எது எப்படி இருப்பினும் இந்த சந்தேகத்திற்குரிய பதிவு எண் கொண்ட வாகனத்தை பறிமுதல் செய்து உரிய முறையில் புலண் விசாரணை செய்தால் உண்மை வெட்ட வெளிச்சமாகும்.

போக்குவரத்து காவல்துறையினரும், போக்குவரத்து அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

பொறுத்திருந்துப் பார்ப்போம்.

-கே.பி.சுகுமார்.

 

Leave a Reply