மாணவிக்கு அச்சம்; பார்வையாளர்களுக்கு அவசரம்; பயிற்சியாளரின் அலட்சியம்!-இரண்டாவது மாடியில் இருந்து வலுக்கட்டாயமாக தள்ளி விட்டதால் கல்லூரி மாணவி பலி !- கோவை கலைமகள் கல்லூரியில் நடந்த கொடுமை.

லோகேஸ்வரி.

கோயம்புத்தூர் மாவட்டம், ஆலாந்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, நரசிம்மபுரம் அருகே உள்ள கோவை கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், என்.எஸ்.எஸ். சார்பில், “தேசிய பேரிடர் மேலாண்மை பாதுகாப்பு பயிற்சி மற்றும் முதல் உதவி கருத்தரங்கு” நேற்று நடைப்பெற்றது.

இதில் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் பயிற்சியாளர் ஆறுமுகம்? சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். அவரது நேரடி கண்காணிப்பில், மாணவ, மாணவிகள் பாதுகாப்பு பயிற்சியில் ஈடுப்பட்டனர்.

தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் பயிற்சியாளர் ஆறுமுகம்?

இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக, தீ விபத்து மற்றும் உயிருக்கு ஆபத்தான, அவசரமான தருணங்களில், உயரமான கட்டங்களில் சிக்கியுள்ள நபர்களை எப்படி காப்பாற்றுவது? (அல்லது) உயரமான கட்டங்களில் இருந்து எப்படி கீழே குதித்து உயிர் பிழைப்பது? என்ற செயல் முறை பயிற்சி நடைப்பெற்றது.

இதில் இளம்நிலை இரண்டாம் ஆண்டு படிக்கும் 19 வயது லோகேஸ்வரி என்ற மாணவியை, கல்லூரியின் 2-வது மாடியில் இருந்து, கீழே குதிக்கும்படி ஏற்பாடு செய்து இருந்தனர். அவர் கீழே குதிக்கும் போது அவரை பாதுகாப்பாக தாங்கிப் பிடிப்பதற்கு, பாதுகாப்பு வலைகளுடன் ஒரு குழுவினர் கீழே தயாராகக் காத்திருந்தனர்.

ஆனால், பயத்தின் காரணமாக, மாணவி லோகேஸ்வரி, 2-வது மாடியில் இருந்து, கீழே குதிப்பதற்கு சின்ன குழந்தையை போல் அடம்பிடித்தார். இதைப் பார்த்து கீழே இருந்த பார்வையாளர்களும், மேலே லோகேஸ்வரி அருகில் இருந்த நபரும், லோகேஸ்வரியை கீழே குதிக்கும்படி வற்புறுத்தினர்.

ஆனால், தனக்கு ஏதாவது ஆகிவிடுமோ? என்ற அச்சத்தின் காரணமாக, லோகேஸ்வரி கீழே குதிப்பதற்கு மறுபடியும் அடம்பிடித்தார்.

இந்நிலையில், லோகேஸ்வரியை எப்படியாவது கீழே குதிக்க வைத்துவிட வேண்டும் என்ற முனைப்பில், மேலே இருந்த நபர், லோகேஸ்வரி கையை பிடித்து இழுத்து, கீழே குதிக்க வைப்பதில் குறியாக இருந்தார்.

எதிர்பாராதவிதமாக, இரண்டாவது மாடியில் இருந்து லோகேஸ்வரியை வலுக்கட்டாயமாக கீழே தள்ளி விட்டார்.

விளைவு, கல்லூரி மாணவி லோகேஸ்வரி, முதல் மாடி கட்டத்தின் காங்கிரீட் தடுப்பில் மோதி பாதுகாப்பு வலையில் விழுந்தார்.

இரண்டாவது மாடியில் இருந்து லோகேஸ்வரி அவராக குதித்து இருந்தால், தாண்டி குதித்து இருப்பார். ஆனால், அவரை வலுக்கட்டாயமாக கீழே தள்ளி விட்டதால், அவரது தலை மற்றும் வலதுபுற கழுத்து பகுதி முதல் மாடி கட்டத்தின் காங்கிரீட் தடுப்பில் மோதி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பார்வையாளர்களின் அவசர புத்தியாலும், பயிற்சியாளரின் அலட்சியத்தாலும், ஒரு அப்பாவி மாணவியின் உயிர், அநியாயமாக போயிருக்கிறது.

தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் பயிற்சியாளர் ஆறுமுகம்?

இது சம்மந்தமாக ஆலாந்துறை காவல் நிலைய போலிசார் வழக்கு பதிவு செய்து (FIR NO:119/2018) பயிற்சியாளர் ஆறுமுகத்தை கைது செய்துள்ளனர்.

கோவை கலைமகள் கல்லூரியின் முதல்வர் முனைவர் என்.மாலா.

கோவை கலைமகள் கல்லூரியின் முதல்வர் முனைவர் என்.மாலாவிடமும் விசாரணை நடைப்பெற்று வருகிறது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply