சேலம் மாவட்டம், ஏற்காட்டில் புனித ஜோசப் மேல் நிலைப்பள்ளியில் வட்டார மருத்துவ அலுவலர் தாம்சன் தலைமையில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் நடைப்பெற்றது. விழாவில் பள்ளி தாளாலர் பிரிட்டோ லூர்துசாமி அனைவரையும் வரவேற்று சிறப்புரை ஆற்றினார்.
வட்டார சுகாதார அலுவலர் செல்வகுமார் தலைமையில் மாணவர்கள் அனைவரும் மக்கள் தொகை விழிப்புணர்வு குறித்த உறுதிமொழியை ஏற்றனர். பின்னர் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, நடைப்பெற்ற பேச்சுப்போட்டியில் கலந்துக்கொண்டு ஹரிகரன், சந்துரு, சுனில் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பெற்றனர். இவர்களுக்கு வட்டார சுகாதார புள்ளியாளர் தனக்குமார் சான்றிதழ்களும், பரிசு கோப்பையும் வழங்கினார். பின்னர் பள்ளி ஆசிரியர் ஜெரோம் அனைவருக்கு நன்றி தெரிவித்தார்.
-நவீன் குமார்.