மனைவிக்கு துரோகம் செய்துவிட்டு கள்ள காதலியுடன் சுற்றி திரிந்தவர் கள்ள காதலியின் முன்னாள் காதலனால் படுகொலை செய்யப்பட்ட பயங்கரம்! -புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் பூபதி கண்ணனின் கொலையில் திடுக்கிடும் திருப்பம்.

தாலிக் கட்டிய மனைவிக்கு துரோகம் செய்துவிட்டு, கள்ள காதலியுடன் சுற்றி திரிந்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் பூபதி கண்ணன், கள்ள காதலியின் முன்னாள் காதலனால் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் பூபதி கண்ணன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவருடன் வேலைப் பார்த்த சக பெண் ஊழியரான டைப்பிஸ்ட் சவுந்தர்யாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் தற்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

சவுந்தர்யாவின் சொந்த ஊர் திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள பெருவளநல்லூர் ஆகும். இவரது கணவர் சுரேஷ். இவர் கரூர் மாவட்டம், குளித்தலையில் வேளாண்மை துறையில் ஊழியராக பணியாற்றி வந்தார். கணவன்-மனைவி இருவரும் குளித்தலையில் வசித்து வந்தனர். முன்னதாக சவுந்தர்யா சொந்த ஊரான பெருவளநல்லூரில் திருமணத்திற்கு முன்பு ஒருவரை காதலித்துள்ளார். திருமணத்திற்கு பின்பும் அவருடன் காதலை தொடர்ந்துள்ளார். இந்த விஷயம் சுரேசுக்கு தெரிய வர, அவர் சவுந்தர்யாவை கண்டித்துள்ளார். இதனால் கணவன்-மனைவிடையே பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. இதில் ஏற்பட்ட விரக்தியில் சுரேஷ் தற்கொலை செய்திருக்கிறார். 

அதன்பின் கருணை அடிப்படையில் சவுந்தர்யாவிற்கு வேளாண்மை துறையில் டைப்பிஸ்ட் வேலை கிடைத்தது. இதையடுத்து அவர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பணிக்கு சேர்ந்துள்ளார். இதன் பின்னர் முன்னாள் காதலன், சவுந்தர்யாவிற்கு நவல்பட்டு, அண்ணாநகர் அருகே வீட்டை வாடகைக்கு எடுத்து கொடுத்துள்ளார்.

சவுந்தர்யாவிற்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மகன் கல்லூரியில் படிக்கிறார். மகள் 7-ம் வகுப்பு படிக்கிறாள்.

இந்தநிலையில், சவுந்தர்யாவுக்கு, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் பூபதி கண்ணனுடன் பழக்கம் ஏற்பட்டு நெருக்கமானது.

பூபதி கண்ணன் திருச்சி, ராஜா காலனி, கணபதி கார்டன், மேரிஸ் அவுன்யூ என்ற முகவரியில் இருந்து தினமும் புதுக்கோட்டைக்கு காரில் சென்று வந்த போது, சவுந்தர்யாவையும் உடன் அழைத்து சென்றார். இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்த விஷயம் சவுந்தர்யாவின் முன்னாள் காதலனுக்கு தெரியவந்தது. அவர் பூபதி கண்ணனுடனான பழக்கத்தை கைவிடுமாறு சவுந்தர்யாவை கண்டித்துள்ளார். 

இதற்கிடையில், சவுந்தர்யாவுக்கு இன்னொருவருடன் கள்ளத்தொடர்பு இருப்பது பூபதி கண்ணனுக்கு தெரியவந்தது. இதனால் சவுந்தர்யாவை, பூபதி கண்ணன் கண்டித்தார். ஒரே நேரத்தில் 2 பேரிடமும் சவுந்தர்யா தொடர்பு வைத்து இருந்ததில், பூபதி கண்ணனின் கண்டிப்பு அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் முதல் கள்ளக்காதலனிடம் அழுது புலம்பியிருக்கிறார். பூபதி கண்ணனை கொலை செய்ய கள்ளக்காதலனுடன் சவுந்தர்யா திட்டமிட்டார்.

அதன்படி சம்பவத்தன்று பூபதி கண்ணனுடன் காரில் வந்த போது, மாத்தூர் அருகே அரைவட்ட சுற்றுச்சாலையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து காட்டுப்பகுதியில் வைத்து பூபதி கண்ணனை கொலை செய்துள்ளனர்.

இதையடுத்து பெருவளநல்லூரை சேர்ந்த கள்ளக்காதலனை பிடிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஆனால், அவர் தலைமறைவாகி உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பூபதி கண்ணனை கொலை செய்தது எப்படி? எத்தனை பேர் என்பது பற்றி இன்னும் முழுமையாக தெரியவில்லை. கொலைக்கு முக்கிய காரணமான சவுந்தர்யா வாய் திறக்காமல் உள்ளார். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சம்பவம் நடந்த 3 தினங்களுக்குள் குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ள காவல்துறையின் முயற்சி உண்மையிலுமே பாராட்டத்தக்கது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

Leave a Reply