திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் இயங்கி வந்த மாவட்ட உரிமையியல் மற்றும் நீதிதுறை நடுவர் நீதிமன்றம், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்களை, மாவட்ட உரிமையியல் நீதிமன்றமாகவும், நீதிதுறை நடுவர் நீதிமன்றமாகவும் தனி, தனியாக பிரிக்கப்பட்டு தொடங்கிவைக்கப்பட்டது.
விழாவிற்கு செங்கம் குற்றவியல் நீதிதுறை நடுவர் முனுசாமி தலைமை தாங்கினார். செங்கம் உரிமையியல் நீதிபதி ராதிகா முன்னிலை வகித்தார். செங்கம் பார் அசோசியேசன் தலைவர் மனோகரன் வரவேற்று பேசினார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி ஜி.புகழேந்தி கலந்துகொண்டு புதிய நீதிமன்றங்களை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
அப்போது திருவண்ணாமலை மாவட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிய கடந்த ஆண்டு மே மாதம் 11-ந் தேதி, நீதிபதிகள் பயணத்தை செங்கத்தில்தான் தொடங்கினோம். 5 நாட்களில் 810 கி.மீ பயணம் செய்து, பல லட்சக்கணக்கான மக்களை சந்தித்தோம். மாவட்டத்தின் நிலுவையில் இருந்த வழக்குகளை முடித்து வைத்தல் என்ற திட்டம், மாவட்டத்தில் முதலாவதாக செங்கத்தில் தொடங்கப்பட்டு, 6,700 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. தேவையற்ற காவல் நிலைய முதல் தகவல் அறிக்கைகளை (FIR) முடித்து வைத்தல் செங்கத்தில் தொடங்கி நிலுவையில் இருந்த 7,000 முதல் தகவல் அறிக்கைகள் முடித்து வைக்கப்பட்டன. இப்படி செங்கத்தில் தொடங்கிய பல நிகழ்வுகள் பெரிய வெற்றி பெற்றன.
திருவண்ணாமலை மாவட்ட நீதிதுறை, மாநிலத்தில் 28-வது இடத்தில் இருந்தது. பல்வேறு செயல்பாடுகளால் தற்போது 3-வது இடம் பெற்றிருப்பது பெருமைக்குரிய விசியமாகும்.
தற்போது செங்கத்தில் ரூபாய். 12 கோடி மதிப்பில் புதிய நீதிமன்றம் கட்டப்பட்டு வருகிறது. கூடுதலாக சார்பு நீதிமன்றமும் உருவாக்கப்படும். இவ்வாறு முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி புகழேந்தி பேசினார்.
நிறைவாக அட்வகேட் அசோசியேசன் தலைவர் விஜயரங்கன் நன்றி கூறினார். விழாவில் திருவண்ணாமலை தலைமை குற்றவியல் நீதிதுறை நடுவர் (பொ) ஸ்ரீராம், மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் ராஜ்மோகன், திருவண்ணாமலை குற்றவியல் நீதிதுறை நடுவர் எண்.2 நீதிபதி விஸ்வநாதன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சாதிக்பாஷா, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி லட்சுமி, வாகன விபத்து சிறப்பு நீதிபதி பக்தவச்சலு, மாவட்ட ஆட்சியர் (பயிற்சி) பிரதாப், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் சுந்தரமூர்த்தி, பழனி, வட்டாட்சியர் ரேணுகா, செங்கம் பார் அசோசியேசன் துணை தலைவர் எம்.சி.மாரி, செயலாளர் செல்வம், இணை செயலாளர் எம்.ஆர்.ரமேஷ், பொருளாளர் பிரபாகரன், நூலகர் சக்தி, அட்வகேட் அசோசியேசன் துணை தலைவர் இளங்கோவன், செயலாளர் கோபால்சாமி, பொருளாளர் சுதாகர், இணை செயலாளர் கு.சந்திரசேகர், நூலகர் சுந்தர்ராஜன், முன்னாள் தலைவர்கள் ஒளிவாணன், செல்வராஜ், ராஜேந்திரன், திருப்பதி உள்ளிட்ட நிர்வாகிகளும், அரசு வழக்கறிஞர் ரமணி மற்றும் வேலு, தினகரன், முருகன், விஜியகுமாரன், பங்காரு, இளயராஜா, பாண்டுரங்கன், ராதா, சிவா, ஜெயவேல், ஆஜா, நடேஷ், ராஜி, மணியரசன், மகபூப்பாஷா, அன்பழகன், சதாசிவம், பிர்லாகுமார், லதா, சொர்ணகாந்தி, சண்முகம், குமார் உள்ளிட்ட அனைத்து வழக்கறிஞர்களும் கலந்துகொண்டனர்.
– செங்கம் சரவணக்குமார்.