காவிரியில் வெள்ளப் பெருக்கு!- திருச்சியை காப்பாற்றிய சிதம்பரம்…!

காவிரியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, மேலணை (முக்கொம்பு) மற்றும் கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 2 லட்சத்து 7 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதனால் கடலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் கரையோரப் பகுதியான திட்டுக்காட்டூர், மடத்தான்தோப்பு, வடக்குவேலக்குடி, பழையநல்லூர், கண்டியாமேடு, இளநாங்கூர் ஆகிய பகுதிகளில் கொள்ளிடம் ஆற்று தண்ணீர் சூழ்ந்தது. கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் வட்டத்தில் மட்டும் 17 கிராமங்கள் பாதிக்கப்பட்டன.

இதில், திட்டுக்காட்டூர், கீழகுண்டலப்பாடி, செயங்கொண்டப்பட்டினம் ஆகிய கிராமங்கள் தீவுகளைப் போல காட்சியளித்தன. இதனால் இங்கு போக்குவரத்து படகு மூலம் தான் நடைப்பெற்றது

இக்கிராமங்களில் இருந்த 3,500 பேரை கடலூர் மாவட்ட ஆட்சியர் தண்டபாணி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்தனர். 11 இடங்களில் உள்ள முகாம்களில் அவர்களை தங்க வைத்தனர். இதனால் உயிரிழப்பு தடுக்கப்பட்டது.

சிதம்பரம் வட்டத்தில் உள்ள கிராமங்களில் வெள்ள நீர் புகாமல் இருந்திருந்தால், திருச்சியில் காவிரி மற்றும் கொள்ளிட கரைப் பகுதிகளில் கட்டாயம் உடைப்பு ஏற்பட்டு இருக்கும்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply