தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்!-உத்தரவின் உண்மை நகல்.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்.

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆணை பிறப்பித்துள்ளார்.
சென்னை மாவட்ட கலெக்டராக இருக்கும் வி.அன்புச்செல்வன், கடலூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் கூடுதல் இயக்குனரான ஏ.சண்முகசுந்தரம் சென்னை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக இருக்கும் இ.சுந்தரவல்லி வணிக வரிகள் இணை கமிஷனராக (நிர்வாகம்) நியமிக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு பதிலாக சென்னை மாநகராட்சி துணை கமிஷனராக (கல்வி) இருக்கும் மகேஸ்வரி ரவிகுமார், திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
தற்போது வகிக்கும் பதவி அடைப்புக் குறியிட்டு காட்டப்பட்டுள்ளது:
எஸ்.பிரபாகர் – கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர். (ஈரோடு மாவட்ட கலெக்டர்).
கே.வீரராகவ ராவ் – ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர். (மதுரை மாவட்ட கலெக்டர்).
சி.கதிரவன் – ஈரோடு மாவட்ட கலெக்டர். (கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர்).
எஸ்.நடராஜன் – மதுரை மாவட்ட கலெக்டர். (ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர்).
ஜெ.ஜெயகாந்தன் – சிவகங்கை மாவட்ட கலெக்டர். (எழுதுபொருள் மற்றும் அச்சு இயக்குனர்).
வி.பி.தண்டபாணி – எழுதுபொருள் மற்றும் அச்சு இயக்குனர். (கடலூர் மாவட்ட கலெக்டர்).
ஜி.லதா – வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை இணைச் செயலாளர். (சிவகங்கை மாவட்ட கலெக்டர்).
குமார் ஜெயந்த் – கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் காதித்துறை முதன்மைச் செயலாளர். (கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர்).
தயானந்த் கடாரியா – கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர். (மின் நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர்).
ஷம்பு கலோலிகர் – சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர்; தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக முழு கூடுதல் பொறுப்பு. (தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய மேலேண்மை இயக்குனர்).
நசிமுதீன் – எரிசக்தித்துறை முதன்மைச் செயலாளர். (சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக முழு கூடுதல் பொறுப்பு).
டி.கே.ராமச்சந்திரன் – இந்து சமய அறநிலையங்கள் துறை கமிஷனர். (அண்ணா மேலாண்மை நிலைய இயக்குனர் மற்றும் பயிற்சிகள் பொது இயக்குனர்).
டி.உதயச்சந்திரன் – தொல்லியல் துறை கமிஷனர். (பள்ளிக்கல்வித் துறை செயலாளர், பாடத்திட்ட உருவாக்கம்).
சுனில் பாலிவால் – தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளர். (உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர்).
சந்தோஷ் கே.மிஸ்ரா – மின் ஆளுமை கமிஷனர், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் மேலாண்மை இயக்குனர். (தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு கழக மேலாண்மை இயக்குனர்).
சந்தோஷ்பாபு – தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர். (தமிழ்நாடு கைத்திறன் மேம்பாட்டுக்கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர்).
வி.அருண் ராய் – தொழில் துறை கூடுதல் செயலாளர். (மாற்றுத் திறனாளிகள் நல கமிஷனர்).
பி.மகேஸ்வரி – மாற்றுத் திறனாளிகள் நல கமிஷனர். (வணிக வரிகள் இணை கமிஷனர் – நிர்வாகம்).
மங்கத்ராம் சர்மா – உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர். (தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை முதன்மைச் செயலாளர்).
ஜெ.ஆனி மேரி ஸ்வர்ணா – ஊரக மேம்பாடு மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் இயக்குனர். (தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழக செயல் இயக்குனர்).
கே.பணீந்திர ரெட்டி – அண்ணா மேலாண்மை நிறுவன இயக்குனர். (கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் காதித்துறை முதன்மைச் செயலாளர்).
அசோக் டோங்ரே – சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியம் மேலாண்மை இயக்குனர். (பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கமிஷனர்).
ஆர்.ஜெயா – தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு கழக மேலாண்மை இயக்குனர். (இந்து சமய அறநிலையங்கள் துறை கமிஷனர்).
சந்திரகாந்த் பி.காம்ளே – மின்நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர். (தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர்).
எம்.எஸ்.சண்முகம் – தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய மேலாண்மை இயக்குனர். (தொழில்துறை சிறப்புச் செயலாளர்).
ஆனந்த்ராவ் விஷ்ணு பட்டில் – தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குனர். (மின் ஆளுமை கமிஷனர் மற்றும் மின் ஆளுமை முகமை மேலாண்மை இயக்குனர்).
பி.சந்திரமோகன் – தமிழ்நாடு கைத்திறன் மேம்பாட்டுக் கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர். (தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர்).
ஜே.யு.சந்திரகலா – தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழக செயல் இயக்குனர். (நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை துணைச் செயலாளர்).
டி.கார்த்திகேயன் – தற்போது சென்னை மாநகராட்சி கமிஷனர். தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக முழு கூடுதல் பொறுப்பு.
இவ்வாறு அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply