இலங்கை கடற்பரப்பில் கோவிலன் பாயின்ட் லைட் ஹவுஸில் இருந்து 15 கடல் மைல் தூரத்தில், படகு கோளாறுக் காரணமாக கடலில் தத்தளித்துக்கொண்டித்த 6 இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர் காப்பாற்றி கரைச் சேர்த்தனர்.
மீட்கப்பட்ட மீனவர்கள் 6 பேரையும், காங்கேசன்துறைக்கு பாதுகாப்பாக அழைத்து வந்து, முதலுதவி மற்றும் மருத்துவப் பரிசோதனைக்கு பின்னர், விசாரணைக்காக காங்கேசன்துறை காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
-என்.வசந்த ராகவன்.