பார்சல் சர்வீஸ் மூலம் தடைசெய்யப்பட்ட போதை தரும் பான்மசாலா மற்றும் புகையிலைப் பொருட்கள் கடத்தல்!-சென்னையில் மூன்று பேர் கைது.

சென்னை K11 cmbt காவல் நிலைய சட்டம்-ஒழுங்கு ஆய்வாளருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், உதவி ஆய்வாளர் ராஜா சிங் தலைமையிலான போலிசார், K11 cmbt காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவன் கோயில் பகுதியில், தடைசெய்யப்பட்ட போதை தரும் பான்மசாலா மற்றும் புகையிலை பொருட்களை பார்சல் சர்வீஸ் மூலம் கடத்தி வந்து, மொத்தமாக வாகனங்களில் விநியோகம் செய்துக் கொண்டிருந்த தாம்பரத்தைச் சேர்ந்த விஜயகுமார் த/பெ, பேச்சியப்பன், விருத்தாசலத்தைச் சேர்ந்த அன்வர் த/பெ.பாஷா, ராஜஸ்தானைச் சேர்ந்த விஜய் என்கின்ற மூனாராம் த/பெ.சின்ஹாராம் ஆகிய மூன்று பேரையும், இன்று காலை போலிசார் கைது செய்தனர். 

மேலும், பான் மசாலா மற்றும் புகையிலை பொருட்களையும், அதை ஏற்றி வந்த லாரி, (KA05 AG 2235 TATA) வேன் (TN06 2359 TATA ace) ஆகியவற்றையும் போலிசார் பறிமுதல் செய்து விசாரணைச் செய்து வருகின்றனர்.

TN06 2359 TATA ace- என்ற வேன், CHENNAI (SOUTH-EAST) RTO, TAMBARAM RTO- ஆகிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகன பதிவின் உண்மை தன்மை குறித்து சம்மந்தப்பட்ட போக்குவரத்து அலுவலகங்களில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்தால்தான் உண்மை நிலவரம் தெரிய வரும்.

முக்கிய குறிப்பு: நாடு முழுவதும் உள்ள தனியார் கொரியர் மற்றும் பார்சல் சர்வீஸ் நிறுவனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் தனியார் சொகுசு பேருந்துக்களில் உள்ள மறைவிடங்கள் ஆகியவற்றை ஒரே நேரத்தில் அதிரடி சோதனை செய்தால், பல்வேறு சட்ட விரோத குற்றச்சம்பவங்கள் வெட்ட வெளிச்சமாகும்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply