வேறொரு நபரின் மனைவியாக இருந்தாலும் அவர் விருப்பத்துடன் உடலுறவில் ஈடுபடுவதை பாலியல் பாலத்காரமாக ஏற்க முடியாது!-உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!- உத்தரவின் உண்மை நகல்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா.

உச்ச நீதிமன்ற நீதிபதி A.M. கான்வில்கர், ஜே.

Loader Loading...
EAD Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

இந்திய தண்டனை சட்டத்தின் 497-ஆவது பிரிவு செல்லுபடியாகுமா? என்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வேறொரு நபரின் மனைவி என்று தெரிந்திருந்தும், அந்த நபரின் சம்மதத்துடனோ, சம்மதம் இல்லாமலோ அப்பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்வது குற்றம் என இந்திய தண்டனைச் சட்டத்தின் 497-வது பிரிவு குற்றம் என சொல்கிறது. இந்த குற்றத்துக்கு 5 ஆண்டுகள் வரை தண்டனை வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

‘‘தகாத உறவு என்பது சட்டவிரோதம் அல்ல. இந்த சட்டத்தின்படி தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும் தண்டனை விதிப்பது என்பது ஏற்கத்தக்கதல்ல. இந்த தகாத உறவு யாரையும் தற்கொலைக்கு தூண்டாத வரையில் இதை குற்றமாக கருத முடியாது.

மனைவி என்பவர் கணவனின் சொத்து அல்ல. ஒருவரது உடன்பாட்டுடன் நடக்கும் உடலறவை, பாலியல் பலாத்காரமாக கருத முடியாது.

இருவர் விரும்பி உடலுறவில் ஈடுபடுவதை பாலியல் பாலத்காரமாக கருதுவதை ஏற்க முடியாது. எனவே, தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும் தண்டனை விதிக்கும் அரசியல் சட்டத்தின் 497-வது பிரிவு ரத்து செய்யப்படுகிறது’’ என நீதிபதிகள் கூறினர்.

இந்த வழக்கு விசாரணை நடந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், திருமணம் என்ற பந்தத்தை வலுப்படுத்தவும், அதன் புனிதத்தை காக்கவுமே 150 ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய சட்டம் கொண்டு வரப்பட்டதாக வாதாடினர். ஆனால், அவர்கள் வாதத்தை நீதிபதிகள் நிராகரித்துள்ளனர்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

Leave a Reply