வழிபாட்டில் பெண்களுக்கு பாகுபாடு காட்டக்கூடாது! -சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் கட்டாயமாக அனுமதிக்க வேண்டும்! உச்ச நீதிமன்ற அமர்வு அதிரடி தீர்ப்பு! -உத்தரவின் உண்மை நகல்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா.

 

உச்ச நீதிமன்ற நீதிபதி A.M. கான்வில்கர், ஜே.

 

Hon’ble Mr. Justice R.F. Nariman.

 

Hon’ble Dr. Justice D.Y. Chandrachud.

 

Hon’ble Ms. Justice Indu Malhotra.

Loader Loading...
EAD Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 10 வயது முதல் 50 வயதுக்குட்டப்பட்ட பெண்களுக்கு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனுமதியில்லை. 

இத்தகைய பாரம்பரிய நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பு உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்தனர். அம்மனுவில் இது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. பாலினச் சமத்துவத்துக்கு எதிரானது. எனவே, அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.

இந்த வழக்கில் பருவம் எய்திய பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கிறோம் என்று கேரள அரசு கடந்த ஜூலை 18-ம் தேதி பதில் மனுத்தாக்கல் செய்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.எப் நாரிமன், .எம். கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி முதல் 8-நாட்கள் விசாரணை நடத்தி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

 ‘‘சபரிமலை கோயிலில் நீண்ட காலமாகவே பெண்களுக்கு பாகுபாடு காட்டப்படுகிறது. பெண்கள் பலவீனமானவர்கள் அல்ல. பெண்கள் ஆண்களுக்கு சமமானவர்கள். வழிபாட்டில் பெண்களுக்கு பாகுபாடு காட்டக்கூடாது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் கட்டாயமாக அனுமதிக்க வேண்டும். கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மறுப்பது சட்டவிரோதம். கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மறுப்பது சுதந்திரம், மரியாதை, பாலின சமநிலைக்கு எதிரானது. இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது’’ என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்று தனது தீர்ப்பில் கூறினார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுடன், நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் இணைந்து அளித்த தீர்ப்பை ஏற்பதாக  நீதிபதிகள் நாரிமன் மற்றும் சந்திரசூட் ஆகியோர் அறிவித்தனர்.

ஆனால், இந்த அமர்வில் இருக்கும் பெண் நீதிபதியான இந்து மல்கோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை அளித்தார்.

Hon’ble Ms. Justice Indu Malhotra.

ஆழ்ந்த மத உணர்வு விவகாரங்களில், சாதாரணமாக நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியம் கிடையாது. சபரிமலை மற்றும் அதன் புனிதத்தன்மை, இந்திய அரசியல் சாசனப்பிரிவு 25-ன் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளது. சட்டப்பிரிவு 14-ன் கீழ், மத ரீதியான சம்பிரதாயங்களை மறு ஆய்வு செய்ய தேவையில்லை. அனைவரும் நம்பிக்கையின் அடிப்படையில் வழிபட உரிமை உள்ளது.

குறிப்பிட்ட பிரிவு அல்லது மதத்தில் பாதிக்கப்பட்ட நபர் இல்லாத வரை, அதில் தலையிட தேவையில்லை. மத பழக்க வழக்கங்களை, சமநிலைக்கான உரிமை என்ற அடிப்படையில் மட்டும் சோதனை செய்யக்கூடாது. மதரீதியான சடங்குகள் குறித்து நீதிமன்றம் முடிவு செய்ய தேவையில்லை. வழிபாட்டாளர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என பெண் நீதிபதி இந்து மல்கோத்ரா கூறியுள்ளார்.

ஆனால், 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 4 நீதிபதிகள் ஒரே கருத்தை கொண்டு இருப்பதால், பெண் நீதிபதி இந்து மல்கோத்ரா கூறியுள்ள கருத்து ஏற்றுக் கொள்ளப்படாது.

எனவே, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற 4 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்புதான் இனி நடைமுறைக்கு வரும்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply