இந்தோனேசியா தீவில் பாலி(Bali) நாட்டில் உள்ள ஏழு கடல் கோயில்களில் ஒன்று இந்த “தனாஹ் லாட்”. இது பிரபலமான சுற்றுலா தளமாகவும், அந்நாட்டின் கலாச்சார சின்னமாகவும், பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தும் இயற்கை எழில் மிக்க புனித தளமாகவும் திகழ்கிறது.
“தனாஹ் லாட்” (Tanah lot) என்பதன் பொருள் “கடல் நிலம்” என்பதாகும். பாலிநேசி மொழியில் “தனாஹ் லாட்” எனப்படுகிறது. டென்பாசரிலிருந்து(Denpasar) சுமார் 20-வது கிலோமீட்டர் (12-மைல்) தொலைவில் தபணன்(Tabanan) என்ற இடத்தில்தொடர்ந்து வரும் கடல் அலையினால் உருவமைக்கப்பட்ட பாறையின் மீது உள்ள திருத்தலமாகும்.
இத்திருத்தலம் 15-ம் நூற்றாண்டின் நிரர்த்தா (Nirartha) என்ற பூசாரியால் நிறுவப்பட்டது. அவர் தனது பயணத்தின் போது தெற்கு கடற்கரையில் பாறை தீவின் அழகான அமைப்பினை கண்டு பரவசமடைந்தார். பின் அங்கு சென்றார். அங்கு இருந்த சில மீனவர்களை பார்த்தார், மீனவர்கள் அவருக்கு பரிசு ஒன்றினை வழங்கினர், பின் அவர் அங்கே இரவு தங்கினார்;. அவர் மீனவர்களிடம் பாலினேசியா கடல் தெய்வங்களை வழிபட ஆலயம் எழுப்ப புனித இடமாக இது திகழ்கிறது என்றார்.
“தனாஹ் லாட்” கோயில் கட்டப்பட்டு நூற்றாண்டுகளாக வரலாற்று சிறப்பு மிக்க பாலினேசியா புராணங்களில் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. ஏழு கடல் கோயில்களில் ஒன்றாக இது உள்ளது.
தென் மேற்கு கடற்கரையிலிருந்து பார்ப்பதற்கு இது சங்கிலி தொடர் போன்ற அமைப்பைக் கொண்டுள்ளது. இது இந்துகளின் புனித தளமாகவும் திகழ்கிறது.
பாறை தீவின் தளத்தில், இந்த கோயிலை தீய சக்திகள் ஊடுருவாமல் கடல் விஷ பாம்புகள், பாதுகாத்து வருவதாக நம்பப்படுகிறது. மேலும் இக்கோயிலை கட்டச் சொன்ன நிரர்த்தா இதன் பாதுகாப்புகாக இப்பாம்பினை காவல் தெய்வமாக இருக்கச் சொன்னதாகவும் நம்பப்படுகிறது.
1980-ல் பாறை கோயிலின் முகப்பு சிதைந்து அதன் உட்பகுதி சிறு சிறு துண்டுகளாக விழுந்து ஆபத்தான நிலையில் இருந்தது. ஜப்னீஸ் அரசாங்கம், இந்தோனேசியா அரசாங்கத்திற்கு 800 பில்லியன் (சுமார் 130 மில்லியன் டாலர்கள்) கடன் கொடுத்து பழுது பார்க்க உதவியது. இது பாலினேசியாவில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க தளங்களை பாதுகாக்க சீரமைக்க இப்பணம் உதவியது. இப்போது மூன்றில் ஒரு பங்கு “தனாஹ் லாட்” கோயில் பாறை ஜப்னீஸால் செயற்கையாக உருவாக்கப்பட்டு சுற்றுலாத்தளமாக உள்ளது.
சுற்றுலா பயணிகள் அதிக பணம் செலவு செய்து இத்திருத்தளத்திற்கு ஆர்வமாக வருகின்றனர். சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இங்கு பாலினேசியா பாரம்பரிய பொருட்கள், ஆடைகள் கொண்ட சந்தை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பான உணவகம், தங்குமிடம் சந்தையின் மேற்புறத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் அனைத்து பாதைகளும் கடலில் முடிகிறது.
கி.முத்துலெட்சுமி