‘அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை; எதிரிகளும் இல்லை’ என்பதற்கு எடுத்துக்காட்டாக, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றுள்ளார்.
அரசியலில் எது எப்போது வேண்டுமானாலும் நிகழும் என்பதற்கு இச்சம்பவம் மிகப் பெரிய எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது.
இலங்கையில் முன்பு ஜனாதிபதியாக பதவி வைகித்த மஹிந்த ராஜபக்ஷ, தனது பதவி காலம் முடிவதற்கு முன்பாகவே முன்கூட்டியே தேர்தலை நடத்தி படுதோல்வியடைந்து, பதவியை பறிக்கொடுத்தார்.
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கையின் முப்படை வீரர்களுக்குமிடையே நடைப்பெற்ற இறுதி யுத்தத்தில், லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை கொன்று குவித்ததற்கு இவர்தான் முக்கிய காரணம் என்று, உலகமெங்கும் வசிக்கும் தமிழர்கள் அனைவரும் மஹிந்த ராஜபக்ஷ மீது பகிரங்கமாக குற்றம் சாட்டினார்கள்.
தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி, அப்பாவி பெண்களையும், குழந்தைகளையும், சிறுவர்களையும், முதியவர்களையும் கொடூரமாக கொன்றக் குற்றத்திற்காக, சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி மஹிந்த ராஜபக்ஷவை தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை, இன்றளவும் நிலுவையில் இருந்து வரும் நிலையில், தற்போது இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய நெருக்கடியின் காரணமாக, திடீரென மஹிந்த ராஜபக்ஷ புனிதராக சித்தரிக்கப்பட்டு, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.
முன்பு இலங்கையின் ஜனாதிபதியாக பதவி வைகித்த மஹிந்த ராஜபக்ஷ, தற்போது பிரதமராக பதவியேற்றுள்ளார். இது தமிழ்நாட்டு அரசியலை அப்படியே நினைவுப்படுத்துவதாக அமைந்துள்ளது.
‘எல்லாமே சில காலம்தான்; இதுவும் கடந்துபோகும்’ என்ற வார்த்தைகளில் எவ்வளவு உண்மை இருக்கிறது பார்த்தீர்களா?
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com